Advertisement

அயோத்தி வழக்கின் தீர்ப்பு:எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்!

புதுடில்லி : உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, கடந்த மாதம், 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக, அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

5 ஏக்கர் நிலம்
இந்த வழக்கின் ஒரு தரப்பான, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியம், 'சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை' என, ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதே நேரத்தில், 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து, அது, எந்த முடிவையும் எடுக்கவில்லை. அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட அமைப்புகளும், 'உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்' என, அறிவித்திருந்தன.

சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு, வரும், 9ம் தேதி வரையே அவகாசம் உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்த, சித்திகி என்பவர் சார்பில், அவருடைய வாரிசான, மவுலானா சையது ஆஷாத் ரஷீத், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜமாஉத் - உலேமா -இ - ஹிந்த் அமைப்பின் முக்கியப் பொறுப்பிலும் அவர் உள்ளார்.

மறுஆய்வு
சீராய்வு மனுவில் கூறியுள்ளதாவது:அயோத்தி நிலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பல தவறுகள் உள்ளன. அரசியல் சாசனத்தின், 137வது பிரிவின்படி, இந்தத் தீர்ப்பு மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது.இந்த வழக்கில், இரு தரப்புக்கும் சமமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கருதி உள்ளது. அதனால், ஹிந்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு, நாங்கள் கோரிக்கை வைக்காத நிலையில், 5 ஏக்கர் நிலத்தை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாங்கள் தீர்ப்பை முழுமையாக எதிர்க்கவில்லை.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தாக்கல் குறித்து, ஜமாஉத் - உலேமா - இ - ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கூறியதாவது:பெரும்பாலான முஸ்லிம்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர். இதில், மாற்றுக் கருத்து உள்ளோர் மிகவும் குறைவே. சீராய்வு மனு தாக்கல் செய்யும் உரிமையை நீதிமன்றம் அளித்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய பிரச்னையே, கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதா என்பதே. அதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியிருக்கையில், முஸ்லிம்கள் தரப்புக்கே நிலத்தின் உரிமை இருப்பது உறுதியாகிறது. ஆனால், தீர்ப்பு மாறுபட்டு உள்ளது. அதனால் தான், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4 + 16)

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  முஸ்லீம்களுக்கு அளவுக்கதிகமாக இடம் தருகிறோம் இது தவறு பிரிட்டீஷார் வருவதற்கு முன்பு பெரும்பாலான பகுதிகள் இஸ்லாமியர்களிடம் இருந்ததால் இந்தியாவை இஸ்லாமியர்களிடம் தரவேண்டும் இந்தியா இஸ்லாமிய நாடு என்று வாதிட்ட மூர்க்க கூட்டம் இது அன்றே அடக்கி வைத்திருந்தால் இன்று இவ்வளவு அக்கப்போர் இல்லை

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  வாழ்க நேரு காந்தி . வந்தே மாதரம்

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லாம் இந்திய அரசியல் சட்டம் பலதரப்பட்டவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வரம். அரசியல் சட்டத்தால் நாட்டில் குழப்பங்கள்தான் அதிகரிக்கிறதே தவிர உருப்படியாக எதுவும் நடக்கவில்லை . நாடு ரணகளமாகி கொண்டிருக்கிறது

 • blocked user - blocked,மயோட்

  "கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதா என்பதே. அதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது." - ASI யில் இருப்பவர்கள் கேனைகளா? திரும்பத்திரும்ப அதே பொய்யை சொல்லுவதால் அது உண்மையாகி விடாது.

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மறுசீராய்வு மனு தாக்கல் (16)

 • thonipuramVijay - Chennai,இந்தியா

  பாபர் மசூதி இது இஸ்லாம் அரசர்கள் இடித்து கட்டிய பல்லாயிரக்கணக்கான இந்து கோவில்களில் ஒன்றே ஒன்று ... அதை இடித்ததற்க்கே மறுசீராய்வு என்றால் எப்படி ... உண்மையான நீதி எங்கெங்கெல்லாம் கோவில்சி இடித்து மடூதிகள் கட்டப்பட்டதோ அது அனைத்தையும் இடித்து தள்ளி அங்கு மீண்டும் இந்து கோவில் கட்டப்படவேண்டும் ... இதில் விருப்பமில்லாத இந்துக்கள் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்படவேண்டும் ... இந்துக்களுக்கு இருப்பது இந்தியா ஒரு நாடுதான் ... மூர்க்கமாய் ஒடுக்கப்பட்ட இந்துமதத்தை மீட்டெடுக்கவேண்டும் ...

 • karutthu - nainital,இந்தியா

  இந்த வழக்கை மறுசீராய்வுக்கு உகந்ததல்ல என தீர்ப்பில் எழுதி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே ஆனால் இவனுங்களை திருத்தவும் முடியாது இவனுங்க திருந்தவும் மாட்டாங்க

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Unkalukku veru velaiye kidaiyaathaa naadu pirivinaiyin pothu arasiyalvaathikal seytha maaperum thavarraal thodarnthu innalkallai anubavithu varukirom

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  இந்த வழக்கு பெயரில் நிதி வசூலித்து ...

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  இந்த மாதிரி உலாமா ,ஒசாமா அமைப்புகள் இந்திய மண்ணுக்கு பொருந்தாதவை. அவற்றையெல்லாம் அரேபிய மண்ணில் வைத்து கொள்ளுங்கள். அந்த மண்ணும் மசூதியும் பாபர் இந்தியாவுக்குள் கொண்டுவந்தாரா? வன்முறைறையில் ஆக்கிரமித்து கோவிலை இடித்து கட்டியதே. எந்தவித உரிமையும் கொண்டாட முடியாது. நாட்டுக்குள் அமைதி ,ஒற்றுமை,தேசப்பற்று,முன்னேற்றம் ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் பேசும், செயல்படும் அமைப்புகள்,கட்சிகள் யாவும் தடை செய்யப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் கண்டபடி பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

 • சிவம் -

  எப்படியும் இவர்கள் பிஜேபியையும் RSS ஐயும் புரிந்துகொள்ளபோவதில்லை. பிரதமர் என்ன நன்மை செய்தாலும் அவரை வெறுக்கவே செய்வார்கள். அவருக்கு ஓட்டும் போடப் போவதில்லை. அமித்ஷா காஷ்மீர் விவகாரத்தில் எடுத்த அதிரடி முடிவு போல் மேலும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஆம். இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்படவேண்டும். மாற்று மதத்தினருக்கு இருக்கும் சலுகைகளை நிறுத்த வேண்டும். அனைவருக்கும் பொது சிவில் சட்டம் உடனே அறிவிக்க படவேண்டும். அனைவரும் இந்த நாட்டு மக்கள்தான். ஆனால் இந்திய சட்டத்திட்டங்களுக்கு முன் அனைவரும் சமம். அவரவர் சமய சட்டங்கள் செல்லாது என்ற சட்டம் வரவேண்டும். சிறுபான்மை சமுதாய மக்களின் மனதை மாற்றி மூளை சலவை செய்யும் அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும். அவர்களை தவறாக வழிநடத்தும் ஊடகங்களையும் தடை செய்ய வேண்டும். இவ்வளவையும் செய்ய நேரம் இதுவே. தைரியமாக செயயும் இரும்பு மனிதரும் இருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தை கிட்டத்தட்ட அனைவரும் மறந்துவிட்டோம். நாட்டின் ஒற்றுமையை சீரகுலைக்கும் கட்சிகள், பிரிவினை பேசும் அமைப்புகள் செய்யும் தந்திரம் இதுவே. மக்கள் மறதியை வைத்து தான் அவர்கள் இவ்வளவு நரித்தன வேலைகளை செய்கிறார்கள். அதே மறதியை பயன் படுத்தி நல்ல காரியமும் செய்யலாம் என காட்டவேண்டிய நேரமிது. அப்போதுதான் இவர்களுக்கு புத்திவரும்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இது இனாமா கிடைத்த 5 ஏக்கருக்கு ஆப்பாக முடியும்.....

 • rmr - chennai,இந்தியா

  பல இந்து கோவில்களை மொகலாய மன்னர்கள் இடித்தனர் என்று வரலாற்று ஆதாரம் உள்ளது அதை ஆய்வு செய்து அப்படி இடித்து அவர்கள் கெட்டியா மசூதிகளை அவர்களை வைத்தே கோவில்கலக பழைய படி மாற்றி கொடுக்க சொல்ல வேண்டும்

 • Krish - Bengalooru,இந்தியா

  இஸ்லாமியர்கள் அழித்த தரை மட்டம் ஆக்கிய தொழுகை இடமாக மாற்றிய பல ஆயிரம் கோயில்கள் உள்ளன . இதில் நீங்கள் காசி மதுரா மற்றும் அயோத்திக்கு சென்றால் கண் கூடாக காணலாம் . ஜெயா அம்மையார் கூறியபடி ராமர் அயோத்தில் இல்லாமல் அரபு நாட்டிலா பிறந்தார் ?/ இந்துள்ளக் கேட்பது இந்த மூன்று புனித தளங்களை மட்டும் . இவ்வளவு வருந்திங்களா க இழுத்தடிக்கப்பட்ட இந்த தீர்ப்பை ஏதுவாய் இருந்தாலும் ஏற்போம் என்று இரு பார்ட்டிகளுக்கு கூறினார் . ஒருமித்த தீர்ப்பு வந்த பிறகும் இந்த சீர் ஆய்வு கோரிக்கை நல்லது அல்ல . பாகிஸடானில் 1947 ல் 37 % இந்துக்கள் இருந்தனர் இப்போது அங்கு அவர்கள் விறல் விட்டு என்னும் அளவுக்கு குறைந்துள்ளது ஆனால் நம் நாட்டிலோ இஸ்லாமியர்கள் ஜனத்தொகை அபரிமிதமாக வளர்ச்சி .நம் கோயில்களில் இருந்து 23 .5 % டேக்ஸாக அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது . ஆனால் இஸ்லாமிய கிருத்துவ தளங்கள் எந்த வரியும் இல்லை . மத சார்பு அற்ற என்ற பெயரில் இந்து மதமே பாதிக்க பட்டு இருக்கிறது

 • ஸாயிப்ரியா -

  முதலில் ராமர் கோயிலை இடித்து அதன் மேல் மசூதி கட்டியதற்குகாரண மனு போடுங்க. இங்க தீரப்பு எல்லோராலும் ஏற்கப்பட்ட ஒன்று. கோர்ட்டின் நேரத்தையும் இந்தியாவின் அமைதியையும் வீணாக்க வேண்டாம்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இதை இங்க இருக்கற ' நல்ல' அரசியல்வாதிங்க தான் தூண்டி விட்டுருப்பானுங்க..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  திமிர் பிடிச்சு அலையறாங்க. மறு சீராய்வு மனு ஜெயிச்சதா கேள்விப்பட்டதேயில்லை . நாட்டில எவனும் நிம்மதியாயிருக்கவே கூடாதுன்னு நெனைக்கிராங்க போலிருக்கு

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  வழக்கை இழுத்தடிக்க நினைக்க கூடாது , தீர்ப்பை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நீங்க என்ன குட்டி கரணம் அடித்தாலும் ஒன்றும் நடக்காது , தீர்ப்பு வருவதற்கு முன்னாள் எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்று கொள்ளுவோம் என்று கூறி கொண்டு இருந்தனர் இந்த குரூப் ?? இப்பொழுது பாருங்க பல்டி அடிக்கறாங்க ?? ஷரியா போற்றும் கூட்டம் நாட்டின் சட்டத்தை எப்படி மதிப்பார்கள் ?? உங்களால் யாரு பாதிக்க படுவார்கள் என்று தெரிந்து ஏண் கலவரத்தை உண்டாக்க அலையுறீங்க ???? பண்ணறது எல்லாம் பண்ணி விட்டு பெருமான்மை மக்கள் மீது பழி போட வேண்டியது ??? அபகரித்த நிலத்திற்கு ஏன் இப்படி அலையுறீங்க ???

  • annamalai - uae,ஐக்கிய அரபு நாடுகள்

   ஏன் தீர்ப்பை நீங்கள் தான் எழுதுபவரா, எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று யார் சொன்னது, மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது எங்கள் உரிமை அதை கேட்க நீ யார், நாட்டின் சட்டத்தை மதிக்க எங்களுக்கு தெரியும்,

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   அந்த கூட்டம் அளித்த பேட்டிகளை போய் பாரு ?? யோகியுங்க மாதிரி பேசுனானுங்க , கொண்டை மறைக்க மறந்து விட்டாயே

Advertisement