Advertisement

புல்லட் ரயில் திட்டம் நிறைவேறுமா?: உத்தவ் தாக்கரே

மும்பை: ''ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம் உட்பட, மஹாராஷ்டிராவில் தற்போது செயல்படுத்தப் படும் அனைத்து திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, நேற்று அளித்த பேட்டி:சிவசேனா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அரசு, சாமானிய மக்களுக்கானது; வசதி படைத்தவர்களுக்கானது அல்ல. மும்பை - ஆமதாபாத் இடையே அமையவுள்ள புல்லட் ரயில் திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா என கேட்கிறீர்கள். இந்த விஷயத்தில், ஆரோ மெட்ரோ ரயில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது போன்ற முடிவை எடுக்க முடியாது.

ஆனால், புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, மறு ஆய்வு செய்யப்படும். அந்த திட்டம் மட்டுமல்ல; மஹாராஷ்டிராவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும். மாநில அரசு, தற்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

ஆனாலும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதில் உறுதியாக உள்ளோம். மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • srinivasan - NAVI MUMBAI,இந்தியா

  பேரு விகாஸ் agadi அனா வந்தோன்ன புல்லட் ட்ரெயின் நிறுத்தியாச்சு. மெட்ரோ நிறுத்தியாச்சு. nanar ரெபினேரி உடம்பில போட்டாச்சு. என்ன வளர்ச்சி. பேசாமே பெற மாத்துங்கப்பா

 • தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா

  தற்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. என்னமோ பிஜேபி ஆட்சி செய்து இவ்வளவு கடனை சூப்பர் இதில் திராவிடத்தை பற்றி ஒரு மூதேவி பேசுது திராவிடம் இல்லாம ஆட்சி மாநிலங்கள் எல்லாம் எங்கே முன்னேறிவிட்டன இதற்க்கு திராவிடர்கள் ஆண்ட தமிழகம் எங்கேயோ உள்ளதே எல்லா வசதிகளும் இங்கே உள்ளன என் குஜராத்தை விட திராவிடர்கள் ஆண்ட தமிழகம் டாப் தானே எனவே அவர்களும் இனி திராவிடத்தை follow பண்ண சொல்லுங்கள்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மறு ஆய்வுன்னா கட்டிங் கொடுத்தால் தொடரலாம் என அர்த்தம் .மூணு கட்சிக்கும் வேணுமே

 • blocked user - blocked,மயோட்

  தாக்கரே கொடுப்பது வெறும் 5000 கோடி மீதி 5000 குஜராத்தில் இருந்தும் மீதி 10000 கோடி ஜப்பான் அரசாங்கமும் நீண்ட காலக்கடனாக கொடுக்கின்றன.

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   அப்புறம் இதையெல்லாம் அரசு பணத்தில் செய்துட்டு தனியாருக்கு விற்கவும் செய்வீங்க ...நாளை இதை தனியாருக்கு கொடுக்க மாட்டோம் என்று உங்களால சொல்ல முடியுமா ..? நாளை தனியாருக்கு கொடுக்க போகும் இந்த புளொட் ரயில் திட்டத்தை இன்றைக்கு அதே தனியார் நிறுவனத்தை வைத்தே துவங்க சொல்லலாமே ... நாட்டின் மிக பெரிய நிறுவனமான சாமானியனின் ரயில்வே துறையை தனியாருக்கு கொடுக்கும் முயற்சியில் அரசு உள்ளது .. அவ்வாறிருக்க பின்னர் எதற்க்காக அரசு பணத்தை செலவு செய்து இந்த புளொட் ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் ...

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  விவசாயிகள் கடன் தீர்ப்பது தீர்வு ஆகாது ..மீண்டும் மீண்டும் கடன் வாங்கி அரசாங்கத்தை சங்கடத்துக்கு தள்ளுவார்கள் ...நிறைய விவசாயிகளை கடன் வாங்க தூண்டுவது அரசியல்வாதிகள் தான் … விவசாயத்துக்கு வருமான வரி கிடையாது ..மின்சாரம் மானிய விலையில் அல்லது இலவசம் ..விதைகளும் உரங்களும் மானிய விலையில் கிடைக்கின்றன ..

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   நீ விவசாயியா ...? நீ விவசாயம் செய்தி விட்டு அப்புறம் கருத்து சொல்லு ... உனக்கு மூணு நேரம் வயிறு புடைக்க உண்ண, வெயில் அடி பட்டு உழைக்கும் விவசாயி அதை சொல்லட்டும் .. குளிரூட்டிய அறையில் இருந்து கொண்டு விவசாயியை பற்றி கருத்து சொல்ல நீ யார் ..?

Advertisement