Advertisement

பிரதமரை அவமதிக்கும் விதமாக பேசுவதா? சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பு

Share
புதுடில்லி: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, 'ஊடுருவியவர்கள்' என, காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதை கண்டித்து, லோக்சபாவில், பா.ஜ., உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 'ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோர வேண்டும்' என, ஆளும் கட்சியினர் வலியுறுத்தியதால், சபை, சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நேற்று(டிச.,1) டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, 'பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், குஜராத்தில் இருந்து, டில்லிக்கு ஊடுருவியவர்கள்' என்றார்.

மன்னிப்பு கோருகிறேன்:இந்த விவகாரம், இன்று(டிச.,2) லோக்சபாவில் எதிரொலித்தது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது: பா.ஜ.,வினர், என்னை வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர் என அடிக்கடி கூறுகின்றனர். ஆம்; நான் ஊடுருவிய நபர் தான். என்னைப் போல், மோடியும், அமித் ஷாஷம், குஜராத்தில் இருந்து டில்லிக்கு ஊடுருவியவர்கள் தான். இவ்வாறு, அவர் பேசினார். இதற்கு, பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர்.

பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியதாவது: நாட்டில் உள்ள பல கோடி மக்கள் ஓட்டளித்ததால் தான், மோடியும், அமித் ஷாவும், இந்த பதவி களுக்கு வந்துள்ளனர். அவர்களை அவமதிக்கும் வகையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகிறார். அவர் இவ்வாறு பேசுவதற்கு முன், அவரது கட்சியின் தலைவர் எங்கிருந்து ஊடுருவியவர் என்பதை கூற முடியுமா... தான் தெரிவித்த சர்ச்சைக்கு உரிய கருத்துக்காக, சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதையடுத்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது: தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். என் குடும்பத்தினர், வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் தான். என்னிடம் போதிய ஆவணம் இல்லை. அதற்காக, என்னை ஊடுருவியவன் என கூறினால், அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. நான் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளித்து உள்ளேன். இதில், பா.ஜ., வினருக்கு திருப்தி இல்லை என்றால், மன்னிப்பு கோருகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக, பா.ஜ., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டு, மன்னிப்பு கோரும்படி அமளியில் ஈடுபட்டதால், சபை, சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபாவிலும் அமளி:இந்த விவகாரத்தால், ராஜ்யசபாவிலும் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. 'ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பூபேந்தர் யாதவ் உள்ளிட்ட, பா.ஜ., உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். சபையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் இட்டனர். இதற்கு, திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்., உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சபையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  வங்கதேசம் என்ன இந்தியா வா..... நாளைக்கு ஜாப்பனீயர்ந்து வந்து தமிழ் நாட்டுலேந்து டெல்லிக்கு போய் இருக்கிறவங்கள பார்த்து ஊடுருவியவர்கல்லு சொல்லுவாங்க அதையும் நாங்க கேட்கணும்.. நீ வங்க தேசத்திலிருந்து வரலைனா.. நிரூபீ. இல்ல கேச போடு...

 • thulakol - coimbatore,இந்தியா

  இவன் மெம்பெர் பதவிக்கு லாயக்கு இல்லாதவன் இவனை சொல்லி தப்பில்லை இவன் சார்ந்துள்ள கட்சி அப்படி

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  சவுத்ரி சாப், நீங்கள் காங்கிராஸ் உறுப்பினர், எனவே பிரதமரை மரியாதையின்றி பேசும் உரிமை default ..அதுவும்...வெளி நாட்டுக்காரர் ..டபுள் உரிமை கிடைக்குது... சிறுபான்மையா இருந்திருந்தா, உங்க லெவல் வேற சாப். இருந்தாலும், நீங்கள் பேசலாம். ஆதாரம் யாரும் கேக்கமாட்டாங்க. பேப்பரில் வரும்..வரலீனா சொல்லுங்க...இந்து பேப்பரில் போடுவாங்க நிச்சயம்...டிவி எல்லாத்துலயும் ஒங்க அறிக்கை வரும் சாப்..போதுமா....முடிஞ்சா ....மதம் மாறுங்க..சிறுபான்மையினமா மாறுங்க...அப்பொறம்...உங்க எல்லைகள் பறந்து விரியும்..இல்லைனா, முஸ்லீம் லீக் போன்ற மத சார்பற்ற கட்சியில சேருங்க... இன்னும் பெட்டரா பண்ணலாம். இல்லனா, திமுக போன்ற திருட்டு கட்சியில சேருங்க....வானமே எல்லை....வக்கீல் படையே உங்களுக்கு எப்பயும் இருக்கும். யாரும், எதுவும் கேக்க முடியாது.. யோசிங்க....யோசிச்சு செயுங்க....

 • நக்கல் -

  பிஜேபிக்கு எதிராக குலைப்பதற்கே பார்லியில் கட்டப்பட்டிருக்கும் விலங்கு இவன்.... இத்தாலி அடிமைகளில் மூத்த .. இவன்...

 • shyamnats - tirunelveli,இந்தியா

  ivan எப்படி தேர்தலில் போட்டியிட, பாராளுமன்ரத்தில் தேர்ந்தெடுக்கப்பட அனுமதிக்க பட்டான்? இந்திய பிரஜை இல்லாத ஒருவன் பதவிக்கு வருவதால் இந்திய இறையாண்மைக்கே கேடு உண்டாக்கும் - அது வங்க தேசமானாலும் இத்தாலி ஆனாலும் சரி. விரைவில் இரட்டை குடியுரிமையை தடை செய்ய வேண்டும்.

Advertisement