Advertisement

பங்கஜா முண்டே விலகல்? பா.ஜ.,வில் பரபரப்பு

மும்பை: பா.ஜ.,வின் பங்கஜா முண்டே, கட்சியிலிருந்து விலகியதாக வதந்தி பரவியதால், அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான பங்கஜா முண்டே, கட்சியிலிருந்து விலகி விட்டதாக, இன்று (டிச.,2) வதந்தி பரவியது. தன் சமூக வலைதள பக்கத்தில் இருந்து, பா.ஜ., என்ற வார்த்தையை அவர் நீக்கியதால், இந்த வதந்தி பரவியது.

இது குறித்து, மஹாராஷ்டிரா மாநில, பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், ''பங்கஜா, கட்சியிலிருந்து விலகவில்லை. சட்டசபை தேர்தலில், தன் தோல்விக்கான காரணம் குறித்து, அவர் ஆய்வு செய்து வருகிறார்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    வாரிசு அரசியல் தேவையில்லை ......

  • Sampath Kumar - chennai,இந்தியா

    பேரே சரி இல்லையே ??? ஓகே ஓகே போகட்டும்

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    நல்லாத்தான் இருக்காங்க .. நம்ம ஊரு கட்சியிலுந்தான் இருக்காங்களே , நல்லாவே இல்ல ..

  • Viswam - Mumbai,இந்தியா

    பங்கஜா முதலைமைச்சர் ஆகவேண்டும் என்ற கனவில் மிதந்தவர். ஆகையால் தனது கட்சிக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கியவர். தனஞ்சையோ ஆரம்பகாலம் தொட்டு பிஜேபி இளைஞ்சர் அணியில் இருந்து தனது செல்வாக்கை சொந்தமாக உயர்த்தியவர். சொல்லப்போனால் தனஞ்சய் தான் கோபிநாத்திற்கு பிறகு பிஜேபியில் வந்திருக்கவேண்டும். அனுதாப அலை பாலிடிக்ஸ் எங்குதான் இல்லை? கோபிநாத் முண்டே மறைவிற்கு பிறகு பங்கஜாவிற்கு அந்த தொகுதி போனதால் சரத் பவார் கட்சிக்கு மாறி 2014 இல் பங்கஜாவிடம் தோற்ற தனஞ்சய் தளராமல் கொஞ்சம் கொஞ்சமாக அடிமட்ட லெவெலில் வேலை செய்து உள்ளூர் வட்ட தேர்தல்களில் பங்கஜாவின் ஆட்களை சில வருடங்களாக தோற்கடித்து இமேஜை நன்றாக வளர்த்து உள்ளார். பங்கஜா தோற்றபிறகு கட்சியை விட்டு விலகுவது போல ஸீன் போடுவது எல்லாம் உதார் விடும் ட்ராமா. எல்லாம் நல்லதிற்கே

  • Pandiyan - Chennai,இந்தியா

    விக்கெட்டுகள் விழ ஆரம்பித்து விட்டனவோ ???

Advertisement