Advertisement

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது

சர்க்கரை ரேஷன் கார்டுகள், அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டதால், தமிழகத்தில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை செயல்படுத்த, உணவுத்துறை தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.

தமிழகத்தில், மக்கள் விருப்பத்தின்படி, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அதன்படி, அரிசி கார்டுக்கு, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும்; சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த, மற்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு நாடு முழுவதும், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள், எந்த மாநிலத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கலாம்.

அதாவது, ரேஷன் கார்டு வைத்துள்ள பிற மாநிலத்தவர்கள், தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம். தமிழக கார்டுதாரர்கள், மற்ற மாநிலங்களில் பொருட்கள் வாங்கலாம். தமிழகத்தில் மட்டும், இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால், ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன.
இருப்பினும், 'ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும்; அத்திட்டத்தில், பிற மாநிலத்தவருக்கு, அரிசி, கோதுமை வழங்கினால், அதற்கு பணம் வசூலிக்கப்படும்' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார். அவ்வாறு, பிற மாநிலத்தவருக்கு, அரிசியை விலைக்கு வழங்கினால், தமிழக சர்க்கரை கார்டுதாரர்களும், அதை கேட்க வாய்ப்புள்ளது. இதனால், அரசுக்கு கூடுதல் செலவாகும் என, உணவுத்துறை அதிகாரிகள் கருதினர். இந்நிலையில், கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல், சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை, அரசு சமீபத்தில் வழங்கியது.

இதனால், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி கிடைக்கும் என்பதால், அவர்கள், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில், பிற மாநிலத்தவருக்கு அரிசி வழங்குவதை எதிர்க்க மாட்டார்கள். எனவே, ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு இருந்த தடை நீங்கியதால், அத்திட்டத்தில் இணைய, உணவுத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Believe in one and only God - chennai,இந்தியா

    இது சாத்திய படாது

  • Ashanmugam - kuppamma,இந்தியா

    மத்திய அரசு "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தை எந்த எதிர்ப்பு வந்தாலும் தங்கு தடை இன்றி நிறைவேற்றவேண்டும். ஏனெனில் தமிழ் நாட்டில் வசதி படைத்தவர்கள் எல்லோரும் அரசு பரிசு பொருள் பெற நோக்கில் பலரும் வருமானத்திற்கு மேலே இருந்தும் பொய்யான தகவல்களை கொடுத்து ஸ்மார்ட் கார்டுஐ misuse செய்கின்றனர். மேலும் தமிழ் நாட்டை பொறுத்தவரை மூன்று விதமான கார்டுகள். 1. சர்க்கரை அட்டை( சர்க்கரை மட்டும் பொங்கல் பரிசு தொகை. 2. அரிசி அட்டை எல்லா பொருட்களும், பொங்கல் பரிசு. 3. ஒன்றுக்கும் உதவாத எந்த பொருட்களும் இல்லாத அட்டை பொங்கல் பரிசும் சேர்த்து. ஆக மூன்று விதமான பாரபட்சம் உள்ள தமிழக அரசின் பொது உணவுப்பொருள் விநியோகம் போல் எந்த மாநிலத்திலும் கிடையாது. ஆகவே ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் உள்ள மக்கள் எந்த ரேஷன் கடையிலும் எந்த பொருளும் எங்கு வேண்டுமானாலும் வாங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் ஓட்டுனர் லைசென்ஸ் உரிமையும் இந்தியா முழுக்க "ஒரே நாடு ஒரே லைசென்ஸ்" என்ற முறையை கூடிய விரைவில் அமல்படுத்த வேண்டும்.

  • பச்சையப்பன் -

    ஓரே நாடு ஒரே கேடு!! தமிழகத்தில் வந்தே விட்டது.!!

    • Malick Raja - jeddah

      உணர்வற்ற ஜென்மங்கள் தமிழகத்தை ஆள்வதன் விளைவு என்பதை மறுக்கவே முடியாது எடுப்பார் கைப்பிள்ளையாக, எடுபிடியாக, மத்திய அரசாங்கம் எத்தை சொன்னாலும் அப்படியே நிறைவேற்றும் அடிமை அரசாக தற்போதிருக்கும் அரசு இருப்பது உலகறிந்த உண்மை.. ஒரே கார்டெல்லாம் தமிழகத்திற்கு வரவே கூடாது ..

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    எடப்பாடியால் விளைந்த மற்றொரு நன்மை..நாடு ஒண்ணாயிருக்கும் என்றாலே ஸ்டாலினுக்கும், எடுப்புகளுக்கும் பிடிக்காது.. தமிழனடா ன்னு சொல்லியே பிச்சைக்காக வரிசையில் நிறுத்தி ஒட்டு திருடுனவரு...உரிமை போகுதுன்னா வருத்தம் இருக்கும்தானே...தமிழன்டா னு கூவுறவனெல்லாம். லஞ்சம் வாங்காதீங்க. கொடுக்காதீங்க. சாதிக்கு ஒட்டு, காசுக்கு ஒட்டு போடாதீங்க. மதத்தை வச்சு ஒட்டு போடாதீங்க... இலவசத்துக்கு... சோறு பொட்டணம் கட்டிட்டு போயி வரிசையில் நிக்காதீங்க.. அடுத்தவனோட மத நம்பிக்கையில் மூக்கை நொழைக்காதீங்க.... அப்போ சொல்லுங்க... தமிழன்டா...னு ... சொல்ல மாட்டானுவோ.. இவனுகளோட ஒரே நோக்கம் ஒட்டு திருடுவது... தி மு க வுக்கு ஆதரவாக... அதுதான்... தமிழன்டா னு கூவுர பாதி பேருக்கு உண்மை பேரு போட திராணி இருக்காது.. எல்லாமே .... சிறுபான்மை.. மோடி எதிர்ப்பு கூட்டம்.. குடுமி தெரிஞ்சுடுது... பரவ இல்லை..

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    தமிழில் இருந்தால் எப்படி மற்ற மாநிலங்களில் உணவு கொடுப்பார்கள்? நம்ம ஊரில் ஒருவர் ரயில்வே ஊழியரை தமிழில் எழுதிய தாளிக்க கொடுத்து ரயிலுக்கு டிக்கட் பதிவு செய்ய கட்டாயப்படுத்தி அவரை அவமானப்படுத்திய வாட்ஸாப்ப் உலாவந்தததே? எண்ணை மட்டும் வைத்து கொடுப்பார்களா ? வந்தே மாதரம்

Advertisement