Advertisement

நிறுவன வரி குறைப்பு; நிர்மலா சீதாராமன் விளக்கம்

Share
புதுடில்லி: 'முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் தான், நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பரில், அவசர சட்டம் மூலம், நிறுவனங்களுக்கான வரி விகிதம், 30லிருந்து, 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. அத்துடன் தயாரிப்பு துறையில் புதிய நிறுவனங்களுக்கு, வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக, வரிச் சட்டங்கள் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

விவாதத்தின் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வளரும் நாடுகள் மற்றும் அண்டை நாடுகள் பலவும் அன்னிய முதலீடுகளை ஈர்க்க, வரி விகிதத்தை குறைத்துள்ளன. அதை பின்பற்றி, முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நிறுவனங்கள் வரி குறைக்கப்பட்டது.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, அன்னிய நிறுவனங்கள், முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புகின்றன. அத்தகைய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, வரி குறைப்பு அவசியம் என அரசு கருதி நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம், சாப்ட்வேர் உருவாக்கம், பளிங்கு கற்களை 'ஸ்லாப்' ஆக மாற்றுவது, 'கேஸ்' சிலிண்டர் நிரப்புதல், புத்தக அச்சடிப்பு, திரைப்படம் ஆகியவை, புதிய தயாரிப்புகளாக கருதி வரிச்சலுகை பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல்?மற்றொரு விவாத்தில், நிர்மலா பேசுகையில், 'பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. உலகில் எந்த நாட்டிலும், பெட்ரோல், டீசல் விலை, ஒரே சீராக இருப்பதில்லை. ஜி.எஸ்.டி., வரம்புக்குள் இவற்றை கொண்டு வரும் திட்டமில்லை. ஏற்கனவே, ஜி.எஸ்.டி.,யில் பூஜ்ய வரிவிதிப்புக்குட்பட்ட பொருட்களாக இவை உள்ளன' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Rajas - chennai,இந்தியா

  ஒரு ஒரு முறையும் இந்த அம்மா களிமண் என்று நினைத்து உதிரி மணலால் பிள்ளையார் தான் செய்ய பார்க்கிறார். ஆனால் செய்யவே முடியவில்லை. கையால் பிள்ளையார் செய்யும் திறமை (பொருளாதார அறிவு) நமக்கு வரவே வராது என்று சொன்னாலும் தெரிவதில்லை. வேண்டுமானால் களிமண், அச்சு (Efficient Officers , Economist அட்வைஸ்) வைத்து பிள்ளையார் செய்யுங்கள் என்றால் அப்புறம் என் மதிப்பு என்னாவது என்கிறார். கடைக்கு சொந்தக்காரரான இருவர் இவர் வேலையை போற்றி புகழ்ந்து வருகின்றனர்.

 • spr - chennai,இந்தியா

  "அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, அன்னிய நிறுவனங்கள், முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புகின்றன. அத்தகைய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, வரி குறைப்பு அவசியம் என அரசு கருதி நடவடிக்கை எடுத்துள்ளது." - இது முதற்படி அடுத்து தொழிலாளர் சட்டங்களைத் திருத்தக்க கோரும் அந்நிய நாடுகளின் நிர்பந்தத்திற்கு அரசு அடிபணியும் இந்த நாட்டில் உள்ளவர் பணமே முதலீடுகள் இடப்போதுமானது இங்கே தொழில்நுட்பம் ஒன்றுதான் தேவை உலகச்சந்தையின் தேவையறிந்து அதற்குரிய பொருட்களைத் தரமாகத் தயாரித்தால் நாம் வெற்றி பெறலாம் அதானி, அம்பானி மட்டுமல்ல ஆண்டிபட்டி அரசுக்கும் ஆதரவளித்தால், அந்நிய முதலீடுகள் எதுவும் தேவையில்லை

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  கழுதைக்கு வாழ்க்கைப்பட்டாகிவிட்டது . பேப்பர் தின்றுதானே ஆக வேண்டும்

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  எல்லாம் சந்தையில் உள்ள பொருளாதார குண்டர்களுக்கு பயந்து செய்தது . அந்நியர்களுக்கு, அவர்களின் ஏஜெண்டுகளுக்கு நாட்டை விற்கும் முயற்சியின் தொடர்ச்சி

 • Nepolian S -

  மொத்தத்தில் என்னால் ஒன்றும் செய்ய முடியாதுனு சொல்லிட்டு போகவேண்டியதுதானே....அது நாட்டு மக்களுக்கும் தெரியும்..

Advertisement