Advertisement

காலை பிடித்து கை கொடுத்த ரஜினி; நெகிழ்ச்சியில் பிரணவ்

சென்னை: மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவுடனான சந்திப்பின் போது, அவரது காலை பிடித்து கைகொடுத்து, நடிகர் ரஜினிகாந்த் அவரை நெகிழ வைத்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், காலால் ஓவியம் வரைந்து தன்னம்பிக்கையின் நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம், கேரளாவில், பேரிடர் நிவாரண நிதி அளிக்க, முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த போது, தனது காலால் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இது வைரலாக, பிரணவ் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ரஜினி இதற்கு சம்மதம் தெரிவித்து 20 நிமிடம் நேரம் ஒதுக்கினார். இந்நிலையில், சென்னை போயஸ் இல்லத்தில், ரஜினி - பிரணவ் சந்திப்பு இன்று நடந்தது. சந்திப்பின் போது, பிரணவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற ரஜினி, பிரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அவரை நெகிழ வைத்தார். தனது காலால் வரைந்த ரஜினியின் புகைப்படத்தை, அன்பளிப்பாக வழங்கிய பிரணவ், ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

  தமிழ்நாட்டில் உள்ள எத்தனை மாற்று திறனாளிகளை இதுவரை இவர் சந்தித்திருக்கிறார். தமிழன்னா பார்க்க மாட்டாரு.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  பிரணவ் - ப்ரணமாம்

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  அபாரமான கதையமைப்பு.. அட்டகாசமான நடிப்பு.. இப்பொழுதுதான் மனிதாபிமானம் பொங்கி வழிகிறது.. இத்தனை நாள் எங்கு போயிருந்தது? ஏமாற மக்கள் முட்டாள்கள் இல்லை.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   ஏமாறாதீங்க...நீங்கள் அறிவுடன் மிக தெளிவுடன் தேர்ந்தெடுக்க வேண்டிய நபர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், TTV தினகரன், சின்னம்மா சசிகலா, சீமான், திருமா, வைக்கோ, G K வாசன் (ரஜினி தவிர வேறுயாராவது இருக்கீங்களாப்பா முதல்வர் பதவிக்கு? பெயர் சேக்கணும் ) ஓட்ட பந்தயத்தில் ஓடுபவருக்குத்தான் கப்பு வேடிக்கை பார்ப்பவருக்கல்ல.. முதல்வர் வேட்பாளருக்கு நிற்பவரைதான் முதல்வராக்க முடியும்.. அதனால் இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் ..ஏமாறாதவர் நாங்கள் என சொல்லுங்கள் .....வாழ்த்துக்கள்..

 • R Ravikumar - chennai ,இந்தியா

  ரஜினி ஒரு அற்புதமான மனிதர் . அவர் கடந்த காலம் எப்படி என்று தெரியாது . தன்னடக்கமும் , இறை தேடலும் உடையவர் . நான் ரஜினியை நேரடியாக கணிக்கவில்லை. அவர் நண்பர்களை வைத்து அவரை கணிக்கிறேன். அவரை நம்புகிறேன். இவர் இயல்பான தலைவர் இல்லை . சோ அவர்கள் இருந்திருந்தால் ரஜினி நல்ல முடிவு எடுத்திருப்பார் . இவருக்கு தகுந்த வழிகாட்டல் உடன் ஒரு ராஜ குரு கிடைத்தால் தான் வெற்றி பெறுவார் . காலதாமதம் ஆக ஆக .. அவருக்கும் நமக்கும் துரதிர்ஷ்டமே . துக்லக் குருமூர்த்தி உடன் ஆலோசனை பெற்று பிஜேபியில் இணைந்தால் எதும் நல்ல மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது . கமலுடன் நட்பு எந்த அளவிற்கு நீடிக்கும் என்பது சொல்ல முடியாது .

  • தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா

   கடந்த காலம் தெரியாது பின்னர் எப்படி அற்புத மனிதர் ஆனார் உமக்கு மெண்டல் பிஜேபி க்கு வேணும் எப்படி ராதாரவி நமீதா காயத்திரி போன்று எல்லா கழிசடைகளை வரவேற்கும் கட்சி என்ன செய்ய இப்படி வளர்த்தல் தான் உண்டு

  • R Ravikumar - chennai ,இந்தியா

   கடந்த காலம் என்பது அவரது 80-90 திரை உலக வாழ்க்கை. இறை நம்பிக்கை இல்லாத கட்சி மத்தியில், இறை நம்பிக்கை உள்ளவர்கள் ஆட்சிக்கு வருவது நல்லது. சுத்தமான அரசியல் சாத்தியம் இல்லை, இந்த அரசியலை புரிந்து கொள்ள நாமும் அரசியல்வாதி ஆக வேண்டும். சும்மா குதிப்பதில் அர்த்தம் இல்லை. நீங்கள் எந்த கட்சி ஆதரவாளர் ஆக இருந்தாலும் இதுதான் உண்மை .

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   எனக்கு தொடர்ந்து காவிசாயம் பூசும் வேலை நடக்கிறது...இதில் நானும் சிக்கமாட்டேன் வள்ளுவனும் சிக்கமாட்டான்.. ரஜினி பிஜேபி பக்கம் போனால் கிறிஸ்தவ முஸ்லீம் வாக்குகள் 17% ரஜினி மறந்திறவேண்டியதுதான்.. பிஜேபி எதிர்ப்பு மனநிலையில் தமிழகம்.. பிஜேபி எதிர்ப்பு ஓட்டு திமுகவிற்கு போயிடும்.. மிதவாத இந்துக்களின் எண்ணம் அதிமுக இல்லை ரஜினி.. 50% 50%...ரஜினி பிஜேபி பக்கம் போனால் முதல்வர் வேட்பாளரான ரஜினியின் தலைமையில் அதிமுக செயல்படாது.. முதல்வராய் இருந்த இடப்படியும் பன்னீரும் அதை விட மனம் வராது.. ஏற்கனவே நாடுளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் பிஜேபியுடனான கூட்டுன்னு ஒரு பேச்சு இருக்கு.. பிஜேபி தனித்து விடப்படும்.. பாமக விற்கு அதிக இடங்கள் கொடுத்து அதிமுக அதை தன்பக்கம் இழுத்து கொள்ளும்.. தனித்து விடப்படும் பிஜேபி.. யாரும் இல்லாத நிலையில் பிஜேபி தனித்து நின்றால் தமிகத்தில் எத்தனை சதம் வாக்கு பெரும்...1 % வாக்குவங்கி உள்ள பிஜேபி யுடன் ரஜினி இணைந்தால் ரஜினிக்கு லாபமா? பிஜேபிக்கு லாபமா? இப்போதான் தர்மாஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கூட தெரிந்த அரசியல் உங்களுக்கு தெரியலையே ஏன்? அவ்வளவு ஞானமா தமிழக அரசியலில்..?

  • R Ravikumar - chennai ,இந்தியா

   தர்ம ஆஸ்பத்திரி நீங்க தான் கட்டுனீங்களா என்ன ? லாபம் கருதி தான் அப்போ கட்சி ஆரம்பிக்கணும் மாதிரி இருக்கு நீங்க சொல்வது .மக்களுக்கு திராவிட கட்சிகளையும் சாதி கட்சிகளையும் பிடிக்கவில்லை என்பது உண்மை . எது நல்லது என்பது வேறு . எது ஜெயிக்கும் என்பது வேறு . பிஜேபி அல்லது காங்கிரஸ் போன்ற பெரிய தேசிய கட்சிகளை வெறுப்பது தமிழக மக்களுக்கு நல்லது அல்ல . அந்த நோக்கத்தில் தான் ரஜினியை பற்றியும் பதிவிட்டேன் . நன்றி .

 • Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ

  அவருடைய தொழிலே நடிப்பு எல்லாமே வேஷம் ..இது ஒரு நியூஸா ..எதற்கு இந்த விளம்பரம் ..மக்களின் மனதில் இவர் ஒரு நல்லமனிதர் என்ற ஏமாற்று வேலை ..

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   ஏமாந்திராதீங்க... இதுக்கெல்லாம் நம்பி நீங்க ஓட்டு போட இந்திய வந்துறாதீங்க.. என்னது? எப்பமே ஓட்டை போட இந்திய வந்ததே இல்லையா? மன்னிச்சிருங்க உங்கள் கருத்தை பாத்ததும் நீங்க இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா வந்து ஓட்டை போட்டு போனவரோன்னு அதுமட்டுமல்ல இப்போ நடக்கப்போற உள்ளாட்சி தேர்தலுக்கும், 2021இல் நடக்கப்போற சட்டசபை தேர்தலுக்கும் லீவை போட்டு இந்தியா வந்து உங்க ஜனநாயக கடமையை செய்யறவரோன்னு நெனைச்சேன்...

Advertisement