Advertisement

ஊழியர்களின் சம்பள உயர்வு விகிதம் ; 2020 ல் இந்தியா டாப்

புதுடில்லி : வெளிநாட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2020 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் 9.2 சதவீதம் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

கோர்ன் பெர்ரி என்ற நிறுவனம் சுமார் 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், எந்த நாடுகளில் ஊழியர்களுக்கு பணிக்கு ஏற்ப சம்பள உயர்வு இருக்கும் என்ற கூடுதல் தகவலும் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தியா தான் டாப்



அந்த ஆய்வில், இந்தியாவில் ஊழியர்களின் சம்பள வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருந்தது. இது அடுத்த ஆண்டு ( 2020) ல் 9.2 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பணவீக்கத்தை சரிசெய்து ஒப்பிட்டு பார்த்தால் உண்மையான சம்பளம் என்பது 2020 ல் 5 சதவீதமாக மாற வாயப்பு உள்ளது. ஆசியாவிலேயே இ்நதியாவில் தான் சம்பள உயர்வு அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. பல துறைகளில் ஊழியர்களின் நம்பிக்கை உணர்வும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிப்பு



உலகளவில் சம்பள உயர்வு என்பது 2020 ஆம் ஆண்டை பொறுத்தவரை சுமார் 4.9 சதவீதமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. உலகளாவிய பணவீக்கம் 2.8 சதவீதமாக உள்ளது. அதை சரிசெய்தால் ஊழியர்களின் சராசரி சம்பள உயர்வு 2.1 சதவீதமாக இருகும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்ற நாடுகள்



இ்நதியாவை தவிர ஆசியாவின் மற்ற நாடகளை ஒப்பிட்டு பார்த்தால் சம்பள வளர்ச்சி விகிதம் முறைப்படியே,
* இந்தோனேசியா - 8.1 சதவீதம்
* மலேசியா - 5 சதவீதம்
* சீனா -6 சதவீதம்
* தென்கொரியா - 4.1 சதவீதம்

இதனையடுத்து ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளில் ஊழியர்களின் சம்பள வளர்ச்சி விகிதம் குறைந்த அளவில் உள்ளது.
* தைவான் - 3.9 சதவீதம்
* ஜப்பான் - 2 சதவீதம்

ஒவ்வொரு நாடுகளிலும் வளர்ச்சி விகிதம் இந்த விகிதமுறையில் இருக்ககூடும் என்று கோன் பெர்ரி நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அப்படியா? ஆனா, விலைவாசி பலப்பல மடங்கு உயர்ந்திருக்குமே ஏன் அதைப்பற்றி சொல்லவில்லை?

    • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

      ஏன் இந்தக் கற்பனைப்பொய்? பணவீக்கம் வெறும் 4.62% விலைவாசிப்புள்ளி அதலபாதாளத்தில் அதாவது0.16 % மட்டுமே உயர்ந்துள்ளது ( Wholesale prices in India rose by 0.16 percent year-on-year in October of 2019, slowing from a 0.33 percent gain in the previous month and compared with market expectations of a flat reading. It was the lowest wholesale inflation rate since a decline in June 2016 ) ம.மோஹன் காலத்தில் பத்து சதவீதம்வரை உயர்ந்தபோது என்ன செய்தீர்??

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    எல்லாம் எதிர்காலத்தில் தான்.. இன்றும் 15 நாளில் மறந்துடுவானுங்கல்லே.. அந்த தைரியம் தான் மோசடி குரூப்புக்கு. எதையாவது புளுகி காலத்தை ஓட்றானுங்க.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இப்போ 2019 நடக்குதுன்னு மோசடி குரூப்புக்கு யாராவது சொல்றீங்களா?

  • Krishna - bangalore,இந்தியா

    Most Govt. Officials (incl. Police, Courts) Don’t Care to Serve People Besides Grave Power Misuses & Corruption Despite VV Fat Salaries. Best Ways To Improve Services to Supreme People are (a) Abolish All Govt. Posts as they are Anti-People And Double Employment for every Post But Only On Minm Wages (incl. Judges) For Reducing V.Huge Wastage of Public Money, Increasing Work Efficiency & Increasing Services to People. (b) Saved Money be Used for Genuine-Normal Developments (not Freebies-Concessions) (c) Let People’s Reps SUSPEND Govt Officials on Mere Accusations by Unbiased-Affected People (let them Defend in Neutral Courts Arrest them In case of Unbiased Investigation Evidence (d) Abolish Misusing Unionism- Let Affected Individuals Fight for Genuine Rights by Personal Petitions. BUT WHO WILL DO THESE-Ruler-Leaders-PeopleRep Sheeps Want Govt. Officials For Misuse of Powers & Loot of Public Money-Assets. Senior Officers Don’t Do for Same Reasons, Brotherhood Bias & Unionism. Judges are Not Bothered to Serve Justice & People (Only Extremely Delayed, Pro-Ruler Biased & Non-Quality Judgements). ONLY GOD OR EVERY YEAR ELECTIONS (NON-COSTLY) CAN SAVE THE COUNTRY.

  • யாரோ -

    இது தனியார் ஊழியர்களுக்கு கிடையாது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். அவர்களுக்கு தான் விலைவாசிக்கு ஏற்ப சம்பள உயர்வு. மறுபக்கம் அவர்கள் பெறும் லஞ்சம்.

    • karutthu - nainital

      இது ஐ டி ஊழியர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட கணக்கு ஆனால் அவன் நிலையோ நித்ய கண்டம் பூர்ணாயுசு எனக்கு பென்ஷன் ரூபாய் 1806+2853 (consolidated) per month

Advertisement