Advertisement

மேட்டுப்பாளையம் : சுவர் இடிந்து 17 பேர் பலி

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 4 வீடுகளில் இருந்த 17 பேர் பலியாகி உள்ளனர்.

மேட்டுப்பாளையம் நடூர் - ஏடிக்காலனி பகுதியில் மழை காரணமாக தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து, அருகில் இருந்த 4 வீடுகளில் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளும் இடிந்து சேதமாகின. இதில் 4 வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இதுவரை தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

4 வீடுகளில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் 4 பெண்கள், 7 குழந்தைகள் உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • சமத்துவம் - Chennai,இந்தியா

    இந்த இடிந்த சுவருக்கும் தீண்டாமை சுவர் என்று சாதீய வண்ணம் பூசப்பார்க்கிறது ஒரு கூட்டம். சுவர் மிக பழமையானது மேலும் ஏற்கனவே இடிக்க அறிவுறுத்தபட்டு இருந்தால், அதனை செய்யத்தவறிய உரிமையாளருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் விபத்து என்னும் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இதில் தீண்டாமை உள்ளது என்று வாதிடுபவர்கள் அதன் உண்மை தன்மையை கண்டிப்பாக வழக்கின் மூலம் நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    நாட்டில் மழைவெள்ளத்தில் ஆங்காங்கே சில இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன என்று செய்திகள் வருவதைப் படித்திருக்கிறோம். இப்படி ஒரே இடத்தில் இத்தனை மரணங்களா நான்கு குடும்பங்களும் இப்படி அநியாயமா அடியோடு அழிந்துவிட்டதே. மனம் கடும் வேதனைப்படுகிறது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

    மலை பிரதேசங்களில் பெருமழையால் பல உயிரிழப்புகள் நடப்பது கேதார்நாத் போன்ற இடங்களில் நடப்பது. தற்பொழுது கோடிக்கணக்கில் மரம் நாடுகிறார்கள். தமிழகத்தில் நடந்தால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

  • Kumaravel -

    எங்கப்பா அந்த 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் அரசியல்வாதிகளை காணோம்.

  • Naga - Muscat,ஓமன்

    எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மழைக்காலங்கலில் இம்மாதிரி விபத்துக்கள் நடந்துகிட்டுதான் இருக்கு, பாலம் உடைந்து போகுது, அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்துபோகுது, அரசாங்கம் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை.

Advertisement