Load Image
dinamalar telegram
Advertisement

வங்கிகளை உலக தரமாக்க நடவடிக்கை : நிர்மலா சீதாராமன்

சென்னை: வங்கிகளை உலக தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.Latest Tamil News

சிட்டி யூனியன் வங்கியின் 116-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வங்கி என்ற பெயரே மக்களை அச்சுறுத்த தொடங்கி விட்டது. எங்கேயோ ஒரு சிறிய கூட்டுறவு வங்கி செய்யும் மோசடியால் மக்களுக்கு வங்கிகள் மீது நம்பிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஏதோ ஓர் இடத்தில் யாரோ ஒருவர் செய்யும் தவறு மொத்த வங்கிகள் மீதும் சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.
Latest Tamil Newsநாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினால் அது அவர்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் கெடுதலாக முடியும். ரிசர்வ் வங்கி மூலம் இங்குள்ள வங்கிகளை உலகத் தரத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.


வாசகர் கருத்து (36)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்