Advertisement

நிலச்சரிவு பகுதியில் புவியியல் குழுவினர் ஆய்வு

மூணாறு:கேரளா, மூணாறு அருகே கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் புவியியல் வல்லுனர்கள் ஆய்வு நடத்தினர்.

கொச்சி- -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- - போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பணிகளின்போது மூணாறு அருகே கேப் ரோட்டில், ஜூலை 28 மற்றும் அக்.8, 11 ல் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன.
ஆய்வு

இந்நிலையில் கோழிக்கோடு என்.ஐ.டி., டீன் சந்திராதரன், மாவட்ட புவியியல் துறை அதிகாரி அஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். மண், பாறைதுண்டுகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இரண்டு வாரத்திற்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும், என குழுவினர் கூறினர்.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண், பாறைகளை அப்புறப்படுத்துவதுகுறித்து இடைக்கால அறிக்கை வழங்கப்படும். அதன்படி பணிகள் செய்து போக்குவரத்து துவங்கும், என நெடுஞ்சாலைதுறை உதவி செயல் அதிகாரி ரெக்ஸ்பெலிக்ஸ் கூறினார்.தற்போது மூணாறில் இருந்து தேனிக்கு பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜாக்காடு, ராஜகுமாரி, பூப்பாறை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement