Advertisement

எப்படி தனியா கேக்குறாருன்னு தெரியலியே...!

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சென்னை, சத்தியமூர்த்திபவனில் நடந்தது.மாநில தலைவர் அழகிரி பேசுகையில், 'உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், வெற்றி பெறுவோரை அடையாளம் காட்டுங்கள். எத்தனை சீட்களை பெறுகிறோம் என்பதை விட, எத்தனை சீட்டுகளில் வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம்' என்றார்.
இதைக் கேட்ட நிருபர், 'கூட்டணி தலைவர் யாரை கை காட்டுறாரோ, அவரை தானே நிறுத்த வேண்டி இருக்கும்... இவரு எப்படி தனியா ஆளைக் காட்டச் சொல்றாருன்னு தெரியலியே...' எனக் கூற, அருகிலிருந்து காங்., நிர்வாகி, அவரை முறைத்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement