Advertisement

எதிர்கால தலைவர்: ரஜினியா? கமலா?

Share
சென்னை: தமிழகத்தின் எதிர்கால அரசியல் ரஜினி, கமலைச் சுற்றி இயங்கும் வாய்ப்புகள் தோன்றுவதாக அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய சக்திகள் எம்ஜிஆரும் கருணாநிதியும். கடைசி வரை இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டனர். இவர்களுக்கு போட்டியாக எந்த தலைவரும் உருவாக முடியவில்லை. அனைத்து தேர்தல்களிலும் எல்லா கூட்டணிகளுமே இவர்கள் தலைமையில் தான் ஏற்பட்டன.

எம்ஜிஆர் மறைந்த பிறகு, கருணாநிதியா ஜெயலலிதாவா என்று அரசியல் இருந்தாலும், எம்ஜிஆர் அளவுக்கு ஜெயலலிதாவால் திமுகவின் வெற்றிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த பிறகு, ஏற்பட்ட வெற்றிடம் தான், புதிய தலைவர்கள் பலருக்கும் கண்ணை உறுத்துகிறது.

முந்திக்கொண்ட கமல்
வயதில் ரஜினி மூத்தவராக இருந்தாலும் சினிமாவில் கமல் தான் சீனியர். அரசியலிலும் முதலில் கட்சியை தொடங்கி, அதிலும் சீனியர் ஆகிவிட்டார் கமல். ரஜினி மட்டும் ‛‛இப்போ வருவேன்; அப்புறம் வருவேன்'' என்று போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறார். இருந்தாலும் அரசியல் குளத்தில் ரஜினி குதிப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருப்பதாகவே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.

தனது படங்கள் வெளியாகும் முன்பு எதையாவது கொளுத்திப் போட்டு குளிர் காய்வது ரஜினியின் வழக்கம். ஆனால் சமீபகாலமாக அவர் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் அரசியல் பேசுகிறார். ‛‛எனக்கு காவி பூச முடியாது'' என்று அவர் பேசிய பிறகு, அரசியல் தீ அதிகமாக பற்றிக்கொண்டது.

கமல் விழா
முத்தாய்ப்பாக, கமல் பிறந்த நாள் விழாவில் ரஜினி பேசிய பேச்சு, பல ஆரூடங்களை அரசியல் களத்தில் அலைய விட்டுள்ளது. ஆளாளுக்கு அரசியல் கத்தியை சுழற்ற ஆரம்பித்துள்ளனர். ‛‛முதல்வர் ஆவோம் என இபிஎஸ் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்'' என்று ரஜினி பேசியது, அவர் அரசியல் குளத்தில் குதிக்கப் போவதை உறுதிப்படுத்தி உள்ளது.

இது குறித்து சில அரசியல் நிபுணர்கள் கூறியதாவது:
அவர் பேசியதன் அர்த்தம், முதல்வர் ஆவோம் என்று கற்பனை கூட செய்திராத இபிஎஸ் முதல்வர் ஆகும்போது, நான் (ரஜினி) ஏன் ஆகக் கூடாது. அப்படி நடக்காது என்றும் எப்படி கூற முடியும்'' என்பது தான். அப்படி நடக்குமா, நடக்காதா என்பது ஒருபுறம் இருக்கட்டும், வெற்றிடத்தில் ‛புழுங்கிக்கொண்டு' இருக்கும் தமிழக அரசியலில், எதிர்காலத்தில் இரு தலைவர்களாக ரஜினியும் கமலும் உருவாவார்களா என்பது தான் இப்போதைய கேள்வி.

இது நடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதற்கு கமலிடமே பதில் இருக்கிறது. இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் பேசிய கமல், ‛எனக்கும் ரஜினிக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. இனிமேல் சேர்ந்த நடிக்க வேண்டாம். பிரிந்து விடலாம் என்று முடிவு செய்தோம். இருவரும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்யக் கூடாது என்றும் முடிவு செய்துவிட்டோம்'' என்றார்.

அதாவது, எதிர்காலத்தில் நாம் இருவரும் இரு தலைவர்களாக உருவாக வேண்டும் என்று அவர்கள் பேசி இருக்கலாம் என்று கருத இடம் உண்டு. ஏனெனில் சினிமாவில் இருவரது ஸ்டைலும் நேர் விரோதமாக இருந்தது. அப்போதே தமிழக தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், கருணாநிதிக்கு வயதாக ஆரம்பித்திருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, சினிமா உலகில் இருந்து தான் தலைவர்கள் உருவாகிக்கொண்டு இருந்தனர். எனவே, எம்ஜிஆர், கருணாநிதிக்குப் பிறகு சினிமா உலகைச் சேர்ந்த நாம் தலைவர்களாக உருவாகலாம். நமக்கு இளம் வயது தான் ஆகிறது. இன்னமும் 30 - 40 ஆண்டுகள் நடித்துவிட்டு, அதன் பிறகு அரசியலுக்குள் குதித்து, சேர்ந்தோ தனியாகவோ ஆட்சியைப் பிடிக்கலாம் என்று பேசி இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதை மறுக்கவும் முடியாது.


எனவே அன்று கமல் பேசியதையும் நேற்று ரஜினி பேசியதையும் வைத்து, கூட்டிக் கழித்துப் பார்த்தால்.... எதிர்கால தமிழக அரசியல் ரஜினியா... கமலா... என்று சுற்றிச்சுழல வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன'' என்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (101)

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Ivarkall iruvarum illai srireddy thaan adutha muthalvar thamizhanin manapokku ippadi thaan

 • spr - chennai,இந்தியா

  "‛எனக்கும் ரஜினிக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. இனிமேல் சேர்ந்த நடிக்க வேண்டாம். பிரிந்து விடலாம் என்று முடிவு செய்தோம். இருவரும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்யக் கூடாது என்றும் முடிவு செய்துவிட்டோம்'' - சொன்னவர் கமல். இதுதான் அரசியல் செய்ய தேவையான முக்கியத் தகுதி இந்த நாட்டின் தலையெழுத்து இன்னொரு காமராஜர், ஓமந்தூர் ரெட்டி போன்ற சுயநலமற்ற தலைவர்கள் தோன்ற வாய்ப்பில்லை போலத் தெரிகிறது ஆனாலும் ஏற்கவே தகுதியில்லாத கமலைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்த நாள்வரை இன்று வருவேன் நாளை வருவேன் என்று தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ரஜினியை நம்புவதில் பயனில்லை ஊடகங்கள் அவர்களை உசுப்பேற்றி இது போல கருத்து வெளியிடுவது "காசு" பார்க்கவே

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  ஏம்பா , அப்போ, எங்க திருட்டு கட்சி தலை இந்த போட்டியில இல்லையா? இந்த ஒரு விஷயத்துக்காகவே, இந்த கூத்தாடிகளை ஆதரிக்கலாம். தினமும், திருட்டு கட்சியின் முரட்டு குத்தில் இருந்து தப்பிக்க, மீடியாவின் கவனத்தை ஒருங்கிணைக்க, திருட்டு கட்சியின் கூட்டத்தின் மேல், இருள் படர...................ஆதரிப்போம் கூத்தாடிகளை. திருட்டு கட்சியை ஒழிக்க , என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரு வேண்டுமானாலும் ஆளலாம்.. திருட்டு கட்சி மற்றும் இந்த மத மாற்ற கோஷிட்டிகள் ஒழிக்கப்படவேண்டும். இந்த விதத்தில், திரு ரஜினி அவர்கள் கோடி மடங்கு உயர்ந்தவர்...நேர்மையானவர்... இறை நம்பிக்கை உள்ளவர். மதத்தின் நம்பிக்கைகளை இழித்து பேசி ஒட்டு பொறுக்க முயற்சிக்கமாட்டார்................தேசத்தை காட்டி கொடுக்க மாட்டார்..தமிழ் யாவாரம் செய்ய மாட்டார். பஞ்சமி நிலத்தை திருட மாட்டார். இந்துக்களை கேவலப்படுத்தமாட்டார். .பொய்யான இலவச (பிச்சை )போட்டு ஒட்டு திருட மாட்டார். அப்பொறம் என்னாத்துக்கு, இங்க ஒரு கூட்டம் இவருக்கு எதிராக கூவுதுக................கமலை விட ரஜினி மிக மிக நல்லவர். அவருக்கு இருக்கும் தயக்கம்...........பயம்.................தரையில் இருந்து உச்சம் தொட்ட (தன்னுடைய சொந்த முயற்சி மற்றும் திறமை மற்றும் கடும் உழைப்பால் ) யாருக்கும் இருக்கவே செய்யும். அப்பாரு சேத்து வச்ச திருட்டு காசா இருந்தா எடுத்து அஞ்சு , பாத்து லச்சம் னு கொடுக்கலாம். சவால் விடலாம். பொய் சொல்லி, நாலு எச்சை சோறை வைத்து முட்டு கொடுக்கலாம். ஆனால், ரஜினிக்கு , இந்த வகையான திருட்டு சொத்து இல்லாததனால், திருட்டு , முரட்டு தைரியம் இல்லை. இந்த விதத்தில், அவர் ஒரு கோழைதான். திருட்டு கட்சியின் பயம்...............அவர்களின் கூகைகளின் கூவலில் தெரிகிறது. மார்க்கெட் போன நடிகர் என்று ஒரு கூட்டம் கூவுது. மார்க்கெட் போன நடிகருக்கு இருநூறு , முன்னூறு கோடிகளை போட்டு படம் எடுக்கும் அளவுக்கு சன் பிக்ச்சர்ஸ் கலாநிதி மாறன் புத்தி இல்லாதவரா? அந்த வியாபார வீச்சு அவர்களுக்கு தெரியும். இந்த எச்சை சோத்து குகைகளுக்கு தெரியாது..........அல்லது , தெரியாததுபோல், நடிக்குதுக. உண்மை..........வேறு...ரஜினி ஒரு மிக நல்ல மனிதர். இன்றும் நடுநிலையாளர்கள் அவரை ஏற்கிறார்கள். ஏற்கவில்லை என்றால், திருட்டு கட்சிக்கு ஒட்டு போட்டா , நாடு விளங்குமா? ஒங்க வழிக்கே வருகிறேன். ரஜினி ஒரு மார்க்கெட் போன நடிகர், சரி..... திமுக தலைமை ..................ஒரே ஒரு விஷயம் ................சொந்தமா சாதிச்சது....................சொல்லுங்க பாப்போம்...நாற்பது வருஷம் அரசியலில்...........ஒரு புண்ணாக்கும் இல்லை. மிசா இல்லை. திறமை இல்லை. நேர்மை...பேச்சுக்கே இடமில்லை. மரியாதை ..................தெரியவே தெரியாது..............துரு பிடிச்ச ஆணிய கூட புடுங்க முடியாத தலைமை................ஆனால்,...ரஜினிக்கு, .............எல்லாமே சொந்த சம்பாத்தியம்........கூட்டம்...பணம்.....எல்லாமே...இனிமேல், திமுக குஞ்சுகள் ரஜினியை அரசியலுக்கு வரவைத்து,,...உங்கள் தலைமையின் திறமையை , நேர்மையை , பலத்தை நிரூபிக்க பாருங்க. உங்களோட வீரத்தையெல்லாம்..அந்த பக்கம் ஒரு பொண்ணு....மாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் கலந்து அடிச்சிருச்சு...கழுவுங்க.........நாறுது. ரஜினி யை பற்றி கூறும் முன், இருக்கும் கழிவுகளை சற்று அலசி பார்த்து பேசுங்க. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு வேண்டாம். வியாபாரத்தில், படம் லாபம் தரவில்லை என்று காசை திருப்பி கொடுத்தவர். ........அவர்.................ஒன்றல்ல....இரண்டல்ல....கோடிகளை..............இங்கே கொமெண்ட் போடும் ஒரு உயிரினத்துக்கும் (என்னையும் சேர்த்து) அப்பிடி கொடுக்கும் நேர்மை கிடையாது.... நாம்தான், அந்த நேர்மையை எதிர்கொள்ளும் அளவுக்கு தகுதியானவர்களாக இல்லை. எனவே, திருட்டு கட்சி பின்னாலும், ஓசி சோறு பின்னாலும், இத்தாலி பின்னாலும் சென்று தலைவனை தேடுகிறோம்.. சினிமாவில் தலைவனை தேடக்கூடாது என்று கூவும் கூகைகளே.........திருடன் தலைவனாகலாமா? இத்தாலியில் தலைவனை தேடலாமா? நாலு பொண்டாட்டி காரன் தலைவனாகலாமா? கொஞ்சம் யோசிச்சு, நேர்மையா பதில் போடுங்க...நல்ல தலைவனை நாம் சினிமாவில் தேடும் நிலை யாரால் வந்தது....ஏன், நல்ல தலைவர்கள் வரவேயில்லை. வந்தவர்களுக்கு ஏற்பட்ட கதி தெரியுமே எல்லாமே..............திருட்டு கட்சியின் மாய வலை..நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்பே திருடனும் கொள்ளைக்காரனும், கொலைகாரனும்தான். இதில், ஒரு கழிவைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். இப்போ, யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும், திருட்டு கட்சியின் காசே தீர்மானிக்கிறது...இந்த மோசமான சூழ்நிலைக்கு வெட்கப்படவேண்டும் நாம். ரஜினியை விமர்சிக்க எந்த அருகதையும் நமக்கில்லை. அவரின் தரத்திற்கு, நாம் இன்னும் உயரவில்லை...நமக்கு வாய்த்தது.............கழகம்.............கொடுமை...எல்லா சத்துலயும் ஒட்டு பொறுக்கும் கழகம்..................நேர்மையாயிருந்தால், பதில் சொல்லுங்கள்..வாசகர்களே....

 • Nepolian S -

  இரண்டு பேரும் இல்லை...

 • s t rajan - chennai,இந்தியா

  நம்ப அரசியல் எவ்வளவு கேவலமாக இருக்கிறது. குறைந்த பட்ச படிப்பு (+2) கூட வேண்டாம், சொந்த வாழ்க்கையில் கற்பு வேணாம், குழந்தை குட்டிகளை நேர்மையா வளர்க்கத் தெரிந்திருக்க வேண்டாம், பண/கடன் விஷயத்தில் நேர்மை வேண்டாம், பொருளாதாரம் தெரிந்திருக்க வேண்டாம், ...... ஆனா நடிகரா இரூந்தாப் போதும் ..... நாட்டையே ஆளலாம். என்ன ஒரு சமூக அரசியல் பாரம்பர்யம் நம்ப நாட்டிலே ? ஓட்டுப் போட்டு வளர்த்து விட்டு அப்புறம் குத்துதே குடையுதேன்னு அலரல் ? நிழலை நிஜமுன்னு நம்பி தலையில் மணணை வாரிப் போட்டுக்கொள்வது மாற வேணடும்

Advertisement