Advertisement

250 ஐ தொட்ட ராஜ்யசபா

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ராஜ்யசபாவின் 250 வது கூட்டத்தொடர் இன்று (நவ.,18) அதன் தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கைய்யா நாயுடு தலைமையில் நடைபெறுகிறது.

நாட்டின் உயரிய சபையாக கருதப்படும் ராஜ்யசபாவின் முதல் கூட்டம் 1952 ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதுவரை 249 கூட்டத்தொடர்களை நிறைவு செய்த ராஜ்யசபா, இன்று 250 வது கூட்டத்தொடரை எட்டி உள்ளது. இதனை முன்னிட்டு, ராஜ்யசபா குறித்த புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 249 கூட்டத் தொடர்களை நிறைவு செய்துள்ள ராஜ்யசபாவில் இதுவரை 3817 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 60 மசோதாக்கள் பல்வேறு காரணங்களால் லோக்சபாவில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகின. 1952 ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது முதல் இதுவரை 3,818 சட்டங்கள் பார்லி.,யில் கொண்டு வரப்பட்டுள்ளன.

மொத்தம் 118 பக்கங்களை கொண்ட இந்த நினைவு மலரில் ராஜ்யசபாவின் வரலாறு, சமூக மாற்றம், பொருளாதார மாற்றம், தொழில்துறை வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் ராஜ்யசபாவின் பங்கு, அவையில் நிறைவேற்றபட்ட முக்கிய சட்டங்கள், ராஜ்யசபா செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ( 18 ம் தேதி) , ராஜ்யசபாவின் 250 வது கூட்டத்தொடரை கொண்டாட இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் ராஜ்யசபா குறித்த புத்தகம், ரூ.250 வெள்ளி காசு, ரூ.5 தபால் தலை ஆகியன வெளியிடப்பட உள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • natarajan s - chennai,இந்தியா

    இதையெல்லாம் P I B மூலம் எல்லோரும் படித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கிற்கு இலவசமாகவோ அல்லது மலிவு விலையிலோ பதிப்பித்து நூலகங்களிலும் பொது இடங்களிலும் வைக்கவேண்டும். அப்போதுதான் நமது நாடாளுமன்ற நடவடிக்கை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள முடியும்.

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    எந்த MP என்ன உளறினார்கள் என்று எங்கே படித்தால் தெரியும்

  • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

    இந்த புத்தகம் மேல் சபை இணையதளத்தில் கிடைக்குமா ?

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    உறுப்பினர்கள் நாட்டு மக்களுக்கு உதவக்கூடிய சட்டங்களை நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

  • ezhumalaiyaan - Chennai,இந்தியா

    இந்தப்புத்தகம் விலைக்கு கிடைக்குமா

Advertisement