Advertisement

மரங்களின் காயத்துக்கு மஞ்சள் பத்து ராமநாதபுரம் ஏட்டு சுபாஷுக்கு சபாஷ்

திருச்சி:ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன் 42 போகும் இடம் எல்லாம் மரங்களில் அடித்துள்ள ஆணிகளை பிடுங்கி 'மஞ்சள் பத்து' போடும் பணியை செய்து வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்ட போலீசில் பணியிடை பயிற்சி மையம் செயல்படுகிறது. இதில் சுபாஷ் சீனிவாசன் பயிற்சியாளராக உள்ளார். இவர் நேற்று காலை திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மரங்களில் அடித்திருந்த ஆணியை பிடுங்கி அந்த இடத்தில் நல்லெண்ணெய் மஞ்சள்
தடவிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரை பாராட்டினர்.

சுபாஷ் சீனிவாசன் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டையில் டிராபிக் போலீசாக பணியாற்றியபோது மரத்தில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்ற முடிவு செய்தேன். ஆணிகளை பிடுங்கினேன். எனக்கு இன்ஸ்பெக்டராக இருந்தவர் பாராட்டினார். அந்த ஊக்கத்தால் தொடர்ந்து மரத்தில் ஆணிகளை பிடுங்கி வருகிறேன். இதற்காக தனி கருவிகளை வைத்துள்ளேன்.

எங்கு சென்றாலும் அதை எடுத்துச் சென்று விடுவேன். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்
மரத்தில் ஆணி பிடுங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். சென்னையிலும் விழிப்புணர்வு
ஏற்படுத்தி உள்ளேன்.திருச்சியில் மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்க வந்தேன். ஓய்வு நேரம் என்பதால்ஆணிகளை பிடுங்கி வருகிறேன்.


ஆணியை பிடுங்கிய இடங்களில் மஞ்சள் நல்லெண்ணெய் கலந்து தடவி காயத்தை ஆற்றி
வருகிறேன்.இதுவரை 5000த்துக்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி பிடுங்கி உள்ளேன். என்னால் மரத்தை நட முடியவில்லை. ஆனால் வளர்ந்த மரத்தை காப்பாற்றி எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல விரும்புகிறேன்.இவ்வாறு கூறினார்.

இவரை பாராட்ட 83000 38265.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    பாராட்டுக்கள் .எங்களுக்கு இப்படி ஒரு யோசனை வரவில்லையே ?.

  • Sankare Eswar - tuas,சிங்கப்பூர்

    வாழ்த்துகள்

  • Naren - Chennai,இந்தியா

    படர இடம் இல்லாத முல்லை கொடிக்கு தேர் கொடுத்தான் வள்ளல் பாரி. வாடிய உயிர்களை கண்ட பொழுதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். மக்களும், மன்னனும், மரம், செடி, கொடிகளும் நானே என்றார் மஹாபாரதத்தில் கடவுள் கிருஷ்ணர். உயிர் மரங்களின் துயரையும் அறிந்து நீக்குபவர் என்ற முறையில் இவருக்கு பாராட்டுக்கள்.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    நீ மனிதனா பிறந்து என்னத்த பிடுங்கிட்டே என்று இவரை யாரும் கேட்க முடியாது. மரம்வைத்தவன் தண்ணீர் ஊத்துவான் என்றுபோகாமல், தன்னால் முடிந்த உன்னதமான பணியை செய்கிறார்..

  • nss - Chennai,இந்தியா

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

Advertisement