Advertisement

கத்தியை காட்டி 21 பவுன் வழிப்பறி

காரைக்குடி : காரைக்குடி சுப்பிரமணியபுரம் விஜயா 70. கீழ் வீட்டில் தனியாக வசிக்கிறார். மேல் வீட்டில் இவரது மகன் ராம்குமார் உள்ளார். நேற்று முன்தினம் இரவு ெஹல்மெட் அணிந்து வீட்டிற்குள் வந்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டி அணிந்திருந்த 17 பவுன் நகையை வழிப்பறி செய்து தப்பினார். அப்போது கூச்சலிட்டு வெளியே வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாக்கியலட்சுமியையும் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை வழிப்பறி செய்தார். ஒரே நாளில் இருவரிடம் நகை வழிப்பறி நடந்த சம்பவம் காரைக்குடி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரைக்குடி வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement