dinamalar telegram
Advertisement

ரோட்டில் சாக்கடை கழிவுநீர்

Share
காரைக்குடி : காரைக்குடி கழனிவாசல் பஸ் ஸ்டாப்பில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால், துர்நாற்றம் வீசுகிறது.நகராட்சி முதல் வார்டில் உள்ள கழனிவாசல் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்தனர். இதனால் ரோடுகள், சாக்கடை கால்வாய்கள் முற்றிலும் சேதமானது. இதனால் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி, ரோட்டில் தேங்கி கிடக்கின்றன. இதன் மூலம் கழனிவாசல் பஸ் ஸ்டாப் அருகே சாக்கடை கழிவுகள் தேங்கி, வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தில் தவிக்கின்றனர். 'டெங்கு' காய்ச்சல் பரவிவரும் நிலையில், தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் வளர்ந்து நோய் பரப்பும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement