சென்னை:தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைமுறையில், மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், ஊரகம், நகர்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக, 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு, நேரடி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இத்தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளித்து, இவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் நடத்த ஆளும்கட்சி விரும்பவில்லை. இதுகுறித்த, தங்கள் எண்ணத்தை கட்சியின் நிர்வாகிகள், முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தினர். ஆனாலும், இப்பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என, முதல்வர் திட்டவட்டமாக கூறினார்.
அ.தி.மு.க., சார்பில், இப்பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தமிழக அமைச்சரவை, நாளை அவசரமாக, தலைமை செயலகத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தில், மேயர், நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான நேரடி தேர்தலை ரத்து செய்வது குறித்து, முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தலைமை தகவல் ஆணையர் நியமனம்; பெண்ணையாறு விவகாரத்தில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது குறித்தும், முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
தமிழர்களில் மேக்சிமம் டாஸ்மாக்கிவாசிகள் தான் குடிக்காதவா 25%தேறுமா என்றுமே தெரியலியே அரசுநடத்துகின்ற சாராயக்கம்பெனிகளை முடமாட்டாங்க மூடக்கூடாதுன்னு மீ கூட இந்துக்களுக்கு ஓட்டுப்போடும் போதையர்கள் இருக்கலாம் சுருக்க மரிக்கபோறவா எல்லாம் கொடுத்துவச்சவா