Advertisement

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மண்டல இந்தியன் வங்கி சார்பில், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஓவியம் மற்றும் கட்டுரை உட்பட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட எஸ்.பி., பண்டி கங்காதர், மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவ, மாணவியர் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமாவளவன், முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement