Advertisement

கேரள வருவாய் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு

Share
மூணாறு : ''கேரளாவின் வருவாய் வளர்ச்சிக்கு கூட்டுறவு துறை முக்கிய பங்குவகிக்கிறது,''என, முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்தார்.

இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் கேரள மாநில அளவிலான 66ம் கூட்டுறவு வார விழா நடந்தது. அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமை வகித்தார்.முதல்வர் பினராயிவிஜயன் துவக்கி வைத்தார். அமைச்சர் மணி, இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ், எம்.எல்.ஏ., ரோஷிஅகஸ்டின் உட்பட பலர் பங்கேற்றனர்.

முதல்வர் பேசியதாவது: கேரளாவில் வருவாய் வளர்ச்சிக்கும், வேளாண் உட்பட பல்வேறு சிறிய துறைகளின் வளர்ச்சிக்கும் கூட்டுறவு துறை முக்கிய பங்களித்து வருகிறது. கூட்டுறவு நிறுவனங்கள் வேளாண் கடன்களை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. காய்கறி உற்பத்தியில் மாநிலம் மிக விரைவில் தன்னிறைவு அடையும். சேதமடையும் விளை பொருட்களை பாதுகாப்பதற்கு குளிர் சாதன வசதிகளை செய்து கொடுப்பதற்கு கூட்டுறவு சங்கங்கள் முன் வர வேண்டும். கேரள வங்கி அமைக்கப்படும்பட்சத்தில், கூட்டுறவு துறை உள்பட அனைத்து துறைகளும் வளம் பெறும்,என்றார்.

சரிந்தது: விழா நடந்து கொண்டிருந்தபோது, மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலின் ஒரு பகுதி பலத்த காற்றால் சரிந்தது. கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் அச்சுறுத்தல் உள்ளதால், இடுக்கி எஸ்.பி., நாராயணன் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்வருக்கு கமாண்டோ படையினரும் பாதுகாப்பு அளித்தனர்.----
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement