Advertisement

*மாவட்டத்திற்கான உரங்களை பெறுவதில் சுணக்கம்* விதைத்த நெல்லுக்கு போட உரத்திற்கு சிக்கல்

Share
சிவகங்கை:மாவட்டத்திற்கு தேவையான உரங்களை பெறுவதில், மாவட்ட நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் விதைத்த நெல்லுக்கு
எதிர்காலத்தில் உர கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மாவட்டத்தில் 55 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். நடப்பாண்டு பருவ மழை அதிகளவில் பெய்ததால், நெல் நடவு பணியும் அதிகரித்தன. ஆனால், இதற்கு தேவையான உரங்களை இருப்பு வைப்பதில் வேளாண்மை துறையினர் அக்கறை காட்டவில்லை. இதனால் நெல் நடவுக்கே உரம் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து தேவையை சமாளிக்க 1,450 டன் இருப்பு வைத்துள்ளனர்.


ஆனால் நெல் நடவு செய்த விவசாயிகள், எதிர்காலத்தில் பயிர்கள் நன்கு வளர்ச்சி பெற அடிக்கடி உரமிட வேண்டியது அவசியம். இதனால் அத்தேவைக்கு கூடுதல் உரங்களை வாங்கி வைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என தெரிவிக்கின்றனர். தற்போது வரை சிவகங்கைக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆயிரத்து 800 டன் உரம் காரைக்கால் துறைமுகத்தில் உள்ளது. அவற்றை
எடுத்துவர மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.


உரத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகள் மூலம்
உரங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். சிவகங்கைக்கு ஒதுக்கிய
உரங்களை விரைந்து பெற்று வர கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement