Advertisement

3 நாளில் சாகர் 2வது ஹாட்ரிக்

திருவனந்தபுரம்: சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' லீக் போட்டியில் தீபக் சகார் 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். வங்கதேச அணிக்கு எதிரான 3வது 'டுவென்டி-20' போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த சாகர், அடுத்த 3 நாள் இடைவெளியில் மீண்டும் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தி உள்ளார்.

இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் விதர்பா, ராஜஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி தலா 13 ஓவராக குறைக்கப்பட்டது. 'டாஸ்' வென்ற விதர்பா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அசத்தல் 'வேகம்'



விதர்பா அணிக்கு கேப்டன் பாசல் (14), அக்சய் (24) விரைவில் திரும்பினர். தீபக் சகார் 'வேகத்தில்' மிரட்டினார். 13வது ஓவரை வீசிய இவரது முதல் பந்தில் ரத்தோட் (3) ஆட்டமிழந்தார். நான்காவது பந்தில் தர்ஷன் டக் அவுட்டானார். கடைசி இரண்டு பந்துகளில் முறையே ஸ்ரீகாந்த் (13), வாட்கர் (0) சிக்க, சகார் 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். விதர்பா அணி 13 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சகார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்:



ராஜஸ்தான் அணிக்கு வி.ஜே.டி., முறையில் 13 ஓவரில் 107 ரன்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர் மனீந்தர் சிங் (44) மட்டுமே நம்பிக்கை அளித்தார். ராஜேஷ் (5), ஆதித்யா (6) ஏமாற்றினர். கேப்டன் சகார் 4 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 105 ரன்கள் மட்டும் எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement