Advertisement

அயோத்தியில் ராமர் கோவில்; ஆசிரியையின் 27 ஆண்டு விரதம்

புதுடில்லி: அயோத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டி, ம.பி., ஆசிரியை ஒருவர் கடந்த 27 ஆண்டுகளாக விரதம் இருந்து வந்துள்ளார்.

ம.பி., மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி (81). சமஸ்கிருத ஆசிரியையான இவர், தீவிர ராம பக்தர். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டி, இவர் கடந்த 27 ஆண்டுகளாக விரதம் இருந்து வருகிறார். பால், பழம் மட்டுமே ஆகாரமாக உட்கொண்டு விரதத்தை கடைபிடித்த இவருக்கு, சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து, சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஊர்மிளாவின் மகன் கூறுகையில், '1992ல் பாபர் மசூதி இடிப்பு சம்பவம், என் தாய்க்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தியது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வரை, விரதம் இருக்க உறுதி பூண்டார். இதன்படி, கடந்த 27 ஆண்டுகளாக, பால் மற்றும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்கிறார். என் அம்மாவின் ஆசை நிறைவேறியதால், விரைவில் விழா எடுத்து அவரது விரதத்தை முடிக்க முடிவு செய்துள்ளேன்' இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (28)

  • TechT - Bangalore,இந்தியா

    27....வருடம் ...அப்புறம் .... தெய்வத்தை வைத்து விளம்பரம் நன்றன்று .

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    அவரின் 54 வயதில் இருந்து இந்த விரத முறையை ஆரம்பித்து உள்ளார் ....நம்மால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பால் பழங்கள் சாப்பிட்டு வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் இருக்க முடியுமா ? இது நிச்சயம் அந்த ஸ்ரீ ராமனின் கருணையே ....அவரின் மன உறுதிக்கும் ,இந்த கடினமான விரதத்திற்கும் அவரை நமஸ்கரிக்கிறேன் ... அவரின் மகன் போற்றுதலுக்குரியவர் ..... அயோத்தியில் கோயில் அமைந்தவுடன் அவரை அங்கு கூட்டி சென்று தரிசனம் செய்ய வைக்க வேண்டும் ....

  • Balasubramanian - Bangalore,இந்தியா

    உங்களில் நாங்கள் அந்த சபரியையே காண்கிறோம் அவருக்கு அருள் தந்த ராமன் உங்களுக்கும் நிச்சயம் அருள்வான். உங்களை போன்றவர்கள் மூலமாக நாங்களும் அவன் தரிசனம் பெற காத்திருக்கிறோம்.

  • rajkumar - Tokyo ,ஜப்பான்

    அம்மாவின் ஆன்மா என்றும் மகிழ்வுடன் இருக்க ராமன் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன்

  • blocked user - blocked,மயோட்

    இவர் மட்டுமா.. பலர் இது போல பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து இருந்தவர்கள். சு சாமி போன்றோர் அளவிட முடியாத நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து தினமும் விசாரணனை என்று இறங்கி வெற்றியும் பெற்று விட்டார்கள். அந்த மஹாவிஷ்ணுவின் ஆசி இவர்களுக்கு நிச்சயம் உண்டு.

Advertisement