Advertisement

மஹா.,வில் அடுத்த திருப்பம்; கைகோர்க்கும் சிவசேனா - காங்., - என்.சி.பி.,

Share
மும்பை: காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும், இந்த பேச்சுவார்த்தையால் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் நாடகம் இன்று (நவ.,12) முடிவுக்கு வந்தது. பெரும்பாண்மையை நிரூபிக்க பாஜ., சிவசேனா, தேசியவாத காங்., (என்.சி.பி.,) கட்சிகளுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தும், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதனால், 6 மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது. இருந்தும் ஏதேனும் கட்சி பெரும்பான்மை நிரூபத்தால் விலக்கி கொள்ளப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: ஆட்சி அமைக்க பாஜ., மறுத்த அடுத்தநாள், கவர்னர், எங்களுக்கு அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறினார். ஆனால், காங்., என்.சி.பி., கட்சிகளிடம் பேசுவதற்கு கவர்னரிடம் 48 மணிநேரம் அவகாசம் கேட்டும், அவர் தரவில்லை. நாங்களும், பா.ஜ.,வும் பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்தாலும், தற்போது காங்., - என்.சி.பி., உடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

இதை தொடர்ந்து பாஜ., மூத்த தலைவர், நாராயன் ரானே செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பாஜ., ஆட்சி அமைய தேவேந்திர பட்னவிஸ் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நாங்கள் ஆட்சி அமைக்க முயற்சிப்போம். காங்., என்.சி.பி., உடன் இணைந்து சிவசேனா ஆட்சி செய்யும் என நினைக்கவில்லை. காங்., மற்றும் என்.சி.பி., கட்சிகள் சிவசேனாவை முட்டாளாக்குவதாக நினைக்கிறேன், என்றார்.

முன்னதாக தேசியவாத காங்., கட்சியின் சரத் பவாரும், காங்., கட்சியின் அகமது படேலும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

அப்போது காங்., கட்சியின் அகமது படேல் கூறுகையில், 'மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்பட்ட விதத்தில் திருப்தி இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தும் விதத்தை, இந்த அரசு மீறி உள்ளது. நாங்கள் சிவசேனாவுடனும் கலந்தாலோசிக்க உள்ளோம். பா.ஜ., சிவசேனா மற்றும் தேசியவாத காங்., கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் காங்., கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சரத் பவார் பேசுகையில், சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்களுக்கு அவசரம் இல்லை. காங்., கட்சியுடன் ஆலோசித்தபின், நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம், என்றார்.

தேசியவாத காங் கட்சியின் பிரபுல் படேல் கூறுகையில், ' நவ., 11ம் தேதி சிவசேனா முதலில் எங்களை முறையாக தொடர்பு கொண்டது. நாங்கள் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதித்து பின்னர் முடிவெடுப்போம்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  பதவி வெறி இருக்கும் வரை தாக்கிரெஸ் கு விமோசனம் இல்லே கான் கிரேஸ் லே கூட்ட அவ்ளோ தான் சிவசேனா காணாமலே போயிரும் டோன்ட் WORRY

 • SUNDAR - chennai,இந்தியா

  எல்லாவற்றையும் மறந்து சிவசேனா பிஜேபி உடன் செல்வதுதான் அக்கட்சின் கொள்கைக்கு உகந்தது. பிஜேபி ம் எல்லாவற்றையும் மறந்து பிஜேபி உடன் இணக்கமாக விட்டிட்டு கொடுத்து செல்வதுதான் சாலச் சிறந்தது., காங்கிரஸ் ஐ நம்பி சிவசேனா சென்றால் சிவசேனாவின் எதிர்காலம் பாழ்.

 • அருண் பிரகாஷ்,சென்னை -

  சோனியா ஆதரவு தர தயார்..ஆனால் ஒரே ஒரு நிபந்தனை..தாக்கரே குடும்பம் மதமாற்றம் செய்து கொள்ள வேண்டும்..அதற்கும் தயார் ஆனால் எந்த மதம் என்பதில் குழப்பம் நீடிக்கிறது..

 • வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா

  சிவசேனாவுக்கும் தொட்டு தாலி கட்டிய பிஜேபிக்கும் சண்டை .. இதுக்கு நடுவுல ஒரே அரேபியனுங்களா வர்றான்னுவோலே ..ஏன்?

 • Nathan - Hyderabad,இந்தியா

  படேல் பவ்வார் போட்டோ அடடா , சாகும் மானை தின்ன காத்திருக்கும் கழுகுகள் போல, என்ன உடலுடன் பிறந்த கவனம், என்ன பாவனை

Advertisement