Advertisement

பெண் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள்; உ.பி.,யில் அதிர்ச்சி

ரேபரேலி: ரேபரேலியில் உள்ள காந்தி சேவா நிகேதனில், பெண் ஆசிரியையை, மாணவர்கள் சூழ்ந்து, நாற்காலியை கொண்டு தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி., மாநிலம் ரேபரேயில் உள்ள காந்தி சேவா நிகேதனில், பணியாற்றி வருகிறார் மம்தா துபே. இவர் காந்தி சேவா நிகேதன் குழுமத்தில் குழந்தைகள் நல அலுவலராக உள்ளார். இந்நிலையில் வகுப்பறையில், மம்தா துபேயை வம்பிழுக்கும் சில மாணவர்கள், அவரது கைப்பையை தூக்கி வீசுகின்றனர். அதனை எடுத்து வரும் ஆசிரியையிடம் வாக்குவாத்திலும் ஈடுபட்டனர். அடுத்த சில நொடிகளில் அதில் ஒரு மாணவன், ஆசிரியையை சேரை கொண்டு தாக்கத் துவங்கினார். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை மம்தா துபே கூறுகையில், இரு நாட்களுக்கு முன்பு கைகழுவும் அறையில் வைத்து, காந்தி சேவா நிகேதன் மாணவர்கள் சிலர் என்னை பூட்டிவிட்டனர். இதுகுறித்து மேலாளரிடம் புகார் கொடுத்த போது, மாணவர்கள், அவர்கள் நினைத்ததை தான் செய்வார்கள் என அலட்சியமாக பதிலளித்தார். அடுத்த இரு நாட்களில் மாணவர்களால் நான் தாக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மேலாளர், குழந்தைகளை அடிக்கடி அனாதைகள் என திட்டியதால், மம்தா துபேயை மாணவர்கள் சிலர் தாக்கியதாக கூறினார். இதுகுறித்து மம்தா துபே, மேலாளர் மீது அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (70)

  • Ram Sekar - mumbai ,இந்தியா

    //தொகுதி யாரோட என்பது கேள்வியல்ல/ தப்பிக்க நினைக்காதே ஸ்ரீனிவாசலு. அதிகாரி, அலுவலகம், துறை தவறுகளில் கேள். நான் இப்போது என்னுடன் வேலை பார்ப்பவரை உதைத்தால் ஆட்சி காரணமா?? மூளையை கழற்றிவிட்டு அலைபவரை விட திட்டமிட்டு வதந்தி, பொய் பரப்பும் உன்னை போன்றவரை ஜெயிலில் உள்ளே வைத்து நொங்கெடுக்கவேண்டும்

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    முதல்ல அடிக்கவேண்டியது படிப்பு ஏறாத எல்லா மாணவனுகளையும் டீச்சரை பூட்டியது தாக்கியது ரெண்டும் மாபெரும் தப்பு ரெண்டாவது உதை தாளாளருக்கு செருப்பால அடிக்கணும் இதுகளை எல்லாம் தப்பே இல்லீங்க

  • P. SRINIVASALU - chennai,இந்தியா

    தொகுதி யாரோட என்பது கேள்வியல்ல. யாரோட ஆட்சி பிஜேபி.

  • mohan - chennai,இந்தியா

    போலீஸ் , ராணுவம் நும்பரை தெரிந்து வைத்து கொள்ளலாம்...இரண்டு பேருக்கும், காப்பாற்றும் படி தகவல் கொடுக்கலாம்.. இதெல்லாம் சுப்ரீம் கோர்ட் தானாக விசாரித்து, ஒரு வழி , கண்டு பிடிக்க வேண்டும்...

  • R Elangovan - Thiruvarur,இந்தியா

    மேலாளரின் பொறுப்பற்ற பேச்சு, சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் பிரச்சனையை இந்தளவுக்கு வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மேலாளர் அந்த பதவிக்கு தகுதி அற்றவர் உடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

Advertisement