மண்ணுக்குள் புதைந்து 6 இந்தியர்கள் பலி; ஓமனில் சோகம்
மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் குழாய் பதிக்கும் பணியின் போது நிகழ்ந்த மண் சரிவில் சிக்கி, 6 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் சீப் என்ற பகுதியில் குடிநீர் குழாய் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில், குழாய் பதிக்கும் பணியில் இந்தியர்கள் உட்பட பலர் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், குழியினுள் வேலை செய்து வந்த 6 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். அவர்கள் 6 பேரும் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
இது குறித்து ஓமன் நாட்டின் இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் சீப் என்ற பகுதியில் கடந்த நவ.,10ம் தேதி ஏற்பட்ட கனமழையால், கட்டட பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 6 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலியாகி உள்ளனர் என அறிந்து வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
14 மீட்டர் ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க 12 மணி நேரம் ஆனதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் சீப் என்ற பகுதியில் குடிநீர் குழாய் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில், குழாய் பதிக்கும் பணியில் இந்தியர்கள் உட்பட பலர் ஈடுபட்டு வந்தனர். அந்த பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், குழியினுள் வேலை செய்து வந்த 6 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். அவர்கள் 6 பேரும் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
14 மீட்டர் ஆழத்தில் தொழிலாளர்கள் வேலை செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க 12 மணி நேரம் ஆனதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (16)
இந்த விசாரணையில் ஓமான் அரசும் மற்றும் ஓமான் காவல் துறையும் நேர்மையாகவே நடந்துகொள்வார்கள். இழந்த உயிர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.
நமது நாடு போலல்லாது, இங்கு நல்ல, கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் உண்டு . அதையும் மீறி சில சமயங்களில் எதிர்பாராதவகையில் இந்த மாதிரி ஏற்படுவதுண்டு. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
மிகவும் தூரமான சம்பவம் கசமுசா சொடல இதுக்கெல்லாம் கூவ மாட்டாரே
இன்சூரன்ஸ் செய்வது இங்கு கட்டாயம், நஷ்ட ஈடு கிடைக்க வாய்ப்பு அதிகம், தூதரகம் முழுவீச்சில் செயல் பட்டு நிவாரணம் பெற வேண்டும். முறையான பாதுகாப்பு முறையை கையாள அரசு அறிவுத்தியிருக்கும். இயற்கை சில நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். இவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
போர்வெல் குழி வெட்டி ஏழு வர்சம் மூடாம விட்டு பெத்த புள்ளையை சாவடிச்சா தான் முப்பது லெச்சம், அரசு வேலை தருவாங்க.