Advertisement

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் காண்ட்பால் மாவட்டத்தில் உள்ள குண்ட் என்ற பகுதியில், பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் என்கவுண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி எஸ்பி பானி கூறுகையில், பாதுகாப்பு படை நடத்திய மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவரிடமிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன. அவர் லஷ்கர்-இ-தைபாவுடன் தொடர்புடையவர். ஒரு பயங்கரவாதி பாகிஸ்தானியராக இருந்த அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொரு பயங்கரவாதியின் அடையாளத்தை அடையாளம் காண முடியவில்லை. இவ்வாறு கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement