Advertisement

குரூப் - 4 ரிசல்ட் வெளியீடு; டி.என்.பி.எஸ்.சி., சாதனை

சென்னை: 'குரூப் - 4' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு டி.என்.பி.எஸ்.சி., சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 6,491 காலிப்பணியிடங்களுக்கு, செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட 'குரூப் - 4' தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

72 நாளில் முடிவுகள்:



இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.,1ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வை 16,29,865 பேர் எழுதியிருந்தனர். தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதன்முறை. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் மூலம் மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement