Advertisement

தமிழ் பல்கலை அழைப்பிதழில் தவறான திருவள்ளுவர் படம்

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறை சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படம் தவறாக அச்சடிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது.

தஞ்சாவூரில், திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தஞ்சாவூர் தமிழ்பல்கலைகழகத்தில் இலக்கியத்துறை சார்பில், வரும் 13ம் தேதி, ம.நடராஜன அறக்கட்டளை சொற்பொழிவு விழாவிற்காக வழங்கபட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படத்தில், வலது கையில் இருக்க வேண்டிய எழுத்தாணி இடது கையிலும், இடது கையில் இருக்க வேண்டிய சுவடி வலது கையிலும் இருப்பது போல மாற்றி அச்சடிக்கப்பட்டிருந்தது. இது தமிழர் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்பும்,சர்ச்சையும் எழுந்ததையடுத்து, அவசர அவசரமாக, அடுத்த ஒரு மணி நேரத்தில் புதிய அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (38)

  • blocked user - blocked,மயோட்

    இப்பொழுதெல்லாம் அவரவர் இஷ்டத்துக்கு திருவள்ளுவரை கொண்டாடுகிறார்கள். காமானுபவ கமல் கூட காமத்துப்பால் மட்டும் குடித்துவிட்டு மீதியை விட்டு விடுகிறார். முகவும் கடவுள் வாழ்த்தை விட்டுவிட்டு வெறும் காமத்துப்பாலை மட்டும் குடித்து இன்புற்றார்...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    காவி டிரஸ் போடாமல், பட்டையும் கொட்டையும் இல்லாமல் வள்ளுவரை போட்டது தான் தப்புன்னு சொல்றாய்ங்களோன்னு நெனைச்சேன். அவனுக எல்லாம் இன்னும் கொஞ்ச நாழியிலே வருவானுங்க

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    திருவள்ளுவரை எப்போது இந்து மதத்தை சேர்ந்தவர் என்று பாஜக மீண்டும் உணர்த்தினார்களோ, அப்போதே இந்த விஷமத்தனம் ஆரம்பித்துவிட்டது. உண்மையை இவ்வளவுநாட்கள் த்ராவிஷ அரசியல் குடும்ப முன்னேற்ற கூட்டம் மறைத்ததே பெரிய விஷயம்.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    வள்ளுவரின் போட்டோ கோப்பி இருந்தால் (பாஸ்போர்ட் சைஸ் கூட போதும்) அவரின் வாரிசு(?) யாரேனும் -இப்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக இருந்தாலும் கொடுக்கவும் தமிழ் கூத்தாடிகளுக்கு ரொம்பவே தேவை

    • மணி - புதுகை,இந்தியா

      என்ன ஆட்டம் போட்டாலும் அவருக்கு நூல் போட்டுவிடமுடியாது

    • Vignesh Rajan - chennai,இந்தியா

      மணி-அவருக்கு மீண்டும் பூணூல் போட்டுட்டா நீ .......

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    மாப்பிள்ளைப் பெயரை மாமனார் பெயரோடுக் குழப்பி வாழ்த்துத் தெரிவிக்கும் தறுதலை முட்டாள்கள் தலைவர்களாக வலம் வரும் இந்த மாநிலத்தில் திருவள்ளுவருக்கு கூலிங் கிளாஸ் போட்டு வாயில் பீடி வைத்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை,

Advertisement