Advertisement

ஆட்டம் காட்டும் அரிசி ராஜா: திணறி தவிக்கும் வனத்துறை

Share
பொள்ளாச்சி: வனத்துறையின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிவரும் 'அரிசி ராஜா' என்ற யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அர்த்தனாரி பாளையம், பருத்தியூர், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களை காட்டு யானை அழித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். யானை தாக்கியதில் ஒருவர் பலியானார். திருமால் என்ற பெண் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த யானை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அரிசியை எடுத்து தின்பதில் ஆர்வம் உள்ளது. அதிலும் ரேஷன் அரிசி என்றால் இந்த யானைக்கு உயிர். இதனால் 'அரிசி ராஜா' என இது அழைக்கப்படுகிறது. அரிசி ராஜாவை பிடிக்க மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரிசி ராஜாவை பிடிக்க டாப்சிலிப் பகுதியில் கலீம், பாரி என்ற 2 கும்கி யானைகள் வனத்துறை சார்பில் வரவழைக்கப்பட்டது. யானை வரும் வழித்தடத்தில் அரிசியை வைத்து, அதை சாப்பிட வரும்பொழுது மயக்க ஊசி செலுத்தியும் பிடிக்க வனத்துறை முடிவு செய்தது. இதற்காக 50 கிலோ ரேஷன் அரிசி மூடையுடனும், மயக்க ஊசியுடனும் வனத்துறையினர் காத்துக்கொண்டிருந்தனர். ஆனாலும், பாறைகள், அடர்ந்த செடிகளிடையே அரிசி ராஜா மறைந்து கொள்வதால், மயக்க ஊசி செலுத்தி அதை பிடிப்பது சவாலாக இருப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    ரேஷன் கடை அரிசியை திங்கும், அரிசி ராஜாவிற்கு ரேஷன் கார்டு யார் கொடுத்தார்கள் என்று சி பி ஐ விசாரிக்க வேண்டும் இதை பிடிக்க ஒரே வழி - போலிஸு வலை போட வேண்டியதுதான்

  • siriyaar - avinashi,இந்தியா

    next live show started may be person who catch this will be hero after 3 days. useless media.

Advertisement