Advertisement

இன்ஸ்பெக்டரை மாற்றாதே!: மக்கள் போராட்டம்

சென்னை: காசிமேடு போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில், வட சென்னையில் அடிக்கடி குற்றசம்பவங்கள் நடக்கும். இதனால், போலீசாருக்கு கடும் பணிச்சுமை இருக்கும். இதில் காசிமேடு போலீஸ் ஸ்டேசனும் அடக்கம். இந்த ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக இருந்த சிதம்பர முருகேசன், சிறப்பாக பணியாற்றி, பொது மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இரவு நேரங்களில் நிம்மதியாக தெருவில் நடமாடுவதற்கும், தூங்குவதற்கும் சிதம்பர முருகேசன் தான் காரணம் என அப்பகுதி வாசிகள் புகழ்கின்றனர்.
சென்னையில் பணிபுரிந்து வந்த 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்ளை இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், காசிமேடு இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், அம்பத்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த தகவல் காசிமேடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், இடமாற்றத்தை திரும்ப பெறக்கோரியும், சூரியநாராயண சாலையில் திரண்ட அப்பகுதி மக்கள் நேற்று(நவ.,11) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த சிதம்பர முருகேசன், சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவரை பார்த்த பெண்கள், நீங்கள் எங்களை விட்டும், இங்கிருந்தும் செல்லக்கூடாது என கண்ணீர் விட்டனர். இதனையடுத்து சிதம்பர முருகேசன், 'நான் என்றும், உங்களோடு தான் இருப்பேன். என் மீதான அன்பு காரணமாக மறியலில் ஈடுபட்டுள்ளீர்கள். இதனால், பொது மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். சாலை மறியலை கைவிடுங்கள் ' எனக்கூறினார். அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காசிமேடு போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில், தகராறு, கொலை முயற்சி, அடிதடி வழக்கு, குடும்ப பிரச்னை அடிக்கடி நடந்தது. இது தொடர்பாக போலீஸ் ஸ்டேசனுக்கு அதிகளவில் புகார்கள் வந்து கொண்டிருந்தன. இந்த பிரச்னைகளுக்கு சிதம்பர முருகேசன் சமூக அக்கறையோடு தீர்வு கண்டார். மது அருந்தும் நபர்களை அழைத்து, அதன் பாதிப்புகளை எடுத்து கூறினார். இதன் மூலம் பொது மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தனது மொபைல் எண்ணை, காசி மேடு போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே எழுதி வைத்தார். இதன் மூலம் வரும் அழைப்புகளை கண்டு கொண்டு நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் பொது மக்களின் மனதில் நன்மதிப்பை பெற்றார். கொலை, கொள்ளை, போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்தினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • Nesan - JB,மலேஷியா

    வாழ்க வளமுடன். இதான்டா போலீஸ்.

  • Naga - Muscat,ஓமன்

    வெரி வெரி குட் சார், இவர்தாம்பா நிஜம் சிங்கம் 1 , 2 , 3

  • நிஷார்பானு -

    "ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும்"....

  • Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா

    எல்லாம் கொமாரு செஞ்ச வேலை எல்லாத்துக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி வரும் இதற்க்கு காணோம்

  • J.Isaac - bangalore,இந்தியா

    அரசுக்கு உண்மையாக நேர்மையாக பணிபுரிபவர்களை பிடிக்காது

Advertisement