Advertisement

காங்., அழிய சரியான நேரம்: ஆம் ஆத்மி தலைவர்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்., அழிய சரியான தருணம் இது தான் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரீத்தி சர்மா மேனன் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில், பாஜ., - சிவசேனா இடையே இழுபறி ஏற்பட்டது. சிவசேனா நிபந்தனைகள் காரணமாக, கூட்டணியை முறித்த பாஜ., ஆட்சி அமைக்க பெரும்பாண்மை இல்லாததால் கவர்னர் அழைப்பை நிராகரித்தது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததாலும், சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்தும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரீத்தி சர்மா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: காங்., எப்போதும் நாட்டை விட தங்கள் கட்சிக்கே முன்னுரிமை கொடுக்கிறது. மக்களவைத் தேர்தலில் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை பிடிவாதமாக மறுத்தார்கள். இது பாஜ.,வுக்கு சாதகமாக அமைந்ததால், அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதுபோன்ற செயல்பாடே காங்., கட்சியை அழித்துவிடும். அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தேசியவாத காங்., கட்சியில் சேரவேண்டும். இதுதான் காங்., அழிய சரியான தருணம். இவ்வாறு பிரீத்த சர்மா மேனன் பதிவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    காங்கிரசின் சில தலைவர்கள் தான் இதற்க்கு காரணம் அவர்கள் அழிந்தால் காங்கிரஸ் மீண்டு விடும்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சரியான தலைவர்களின் வழிகாட்டுதல்கள் இல்லாததாலும் மலைவிழுங்கி மகாதேவர்களை கட்சியின் முக்கியபிரமுகர்களாக உள்ளதாலும் அடிமட்ட தொண்டனின் குரலை அசட்டை செய்வதாலும் பேராயக்கட்சிக்கு இந்த நிலை சரியான மாநிலத்தலைவர் தலைமையை தட்டிகேட்கக்கூடிய நேர்மையான ஆட்கள் இருந்தால் காங்கிரஸ் மீண்டும் பலம் பெரும் Sonia அம்மையார் ஒதுங்கி கொண்டால் கண்டிப்பாக கட்சி வளரும்

  • Syed Ghouse Basha -

    காங்கிரஸ் முன்னாடி பல கட்சிகள் அரம்பித்து ஆட்சிவரை வந்து இறுதியில் மடிந்து மண்ணாகி போன வரலாறு தெரியாதவர்கள் காங்கிரஸ்ஸை பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள்! பாவம் இறுதியில் காணாமல் போகப்போவது அவர்கள் தான் என்பதை சரித்திரம் சொல்லும்!

  • Pannadai Pandian - wuxi,சீனா

    ithu enna malluvaa ???

  • krishna -

    Aamam unga katchi enna periya punidha katchipola scene podura.kejriwal pondra joker engu thedinalum kidaikka nathan. kejri pappy serndhu ninirundha kooda ella loksabha thogidhilayum delhila bjp jaithirukkum. Vangiya vote koota paarumma. calculator irukka venuma.

Advertisement