Advertisement

சிவாஜி, கமல், ரஜினி: வம்புக்கு இழுக்கும் எடப்பாடி

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வயதான பின் கட்சி ஆரம்பிக்கும் கமல், ரஜினி போன்றோருக்கு சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும் என முதல்வர் பழனிசாமி கூறியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வரின் இந்த பேச்சு, சிவாஜி, கமல், ரஜினி ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல், கடந்தாண்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்தார். நடிகர் ரஜினி, விரைவில் கட்சி துவங்க இருக்கிறார். இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களாக கருதப்படும் இருவரும் அரசியலுக்குள் நுழைவதால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோருக்கு வயிற்றில் புளியை கரைத்தது. இதன் வெளிப்பாடாக இவர்கள் கமல், ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தனர். தற்போது இந்த வரிசையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்துள்ளார்.
சேலத்தில் பழனிசாமி கூறியதாவது: வயது உள்ளவரை படத்தில் நடித்து வருமானத்தை ஈட்டிவிட்டு, கமல், ரஜினி போன்றோர்கள் கட்சி ஆரம்பிக்கின்றனர். வயதான பின் கட்சி ஆரம்பித்த சிவாஜியின் நிலைமை தான் அவர்களுக்கும் ஏற்படும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

கண்டனம்இதற்கு சிவாஜி சமூக நலப் பேரவை, எம்ஜிஆரும் வயதாகிய பின் தான் கட்சி ஆரம்பித்தார். அப்படியிருக்கையில் சிவாஜியை குறிப்பிட்டு கிண்டலடிப்பதை கடுமையாக கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதால், பழனிசாமி நம்பிக்கையுடன் பேசுவதாக அக்கட்சி தொண்டர்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (84)

 • கோகுல், மதுரை -

  சிவாஜி வந்த பொழுது கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இருந்தனர். போததற்கு ஜானகி அவர்களுக்கு எம்ஜிஆரின் அனுதாப ஓட்டுக்கள். இந்த களேபரத்தில் சிவாஜி காணாமல் போனார். இப்பொழுது உள்ள முதல்வரை பெரும்பாலான மக்களுக்கு யாரென்றே தெரியாமல் இருந்தது. அதனால் தான் பாராளுமன்ற தேர்தலில் ஒரளவு தெரிந்த முகமான ஸ்டாலினுக்காக திமுகவுக்கு ஓட்டளித்தனர். பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ரஜினி என்ற மாபெரும் சக்தி வரும் போது இந்த இருவரும் விலாசம் இழப்பது உறுதி.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  Sivaji Ganesan was a very good actor, nobody can dispute it. But he was a miser, he had not spent his hard earned money for public cause significantly. But MGR is a different person, may be his acting is not comparable to Sivaji Ganesan, But he took care of his fellow co-artists, and also poor people in many occasions. May be he had no family commitments to save money. Both the artists had great talents, but in politics MGR out beats Sivaji Ganesan.

 • Balaji - Chennai,இந்தியா

  முதல்வர் சொல்லி இருப்பதை தவறில்லை. MGR மக்களை அணுகிய விதம் வேறு. சிவாஜி கமல் ரஜினி போன்றோர் மக்களை அணுகும் விதம் வேறு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது. அப்படி இருக்க MGR எந்த வயதில் கட்சி ஆரம்பித்தார் என்பதற்கான ஆராய்ச்சி தேவையில்லாத ஒன்று. ஆனால் மக்களை சற்று தள்ளியே வைத்திருந்த சிவாஜி கமல் போன்றோரும், என்ன செய்கிறார் என்பதே மக்களுக்கு விளங்காத நிலையில் உள்ள ரஜினியும் இப்படி இடப்படியால் விமர்சனத்துக்குள்ளாவதில் தவறில்லை. அவர்களே உண்மையிலேயே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டியது தான் காலத்தின் கட்டாயம்.

 • Raja Vardhini - Coimbatore,இந்தியா

  முதல்வர் மிக சரியாகத்தான் சொல்லியுள்ளார். ரஜினி என்ற நடிகர் தமிழக மக்களுக்கு ஒரு குடிமகன் என்ற முறையில் ஏதேனும் தன் கடமையை செய்துள்ளாரா? எம்.ஜி.ஆர். அவர்கள் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியினை தமிழக மக்களுக்கே செலவிட்டவர். தன் திரைபடத்தில்கூட சிகரெட் குடிப்பது போலவோ, மது அருந்துவது போலவோ நடித்ததில்லை. நிஜ வாழ்க்கையிலும் எந்தவிதமான தீய பழக்க வழக்கங்களும் இல்லாத மனிதர்.. இரக்கம், மனிதாபிமானம், ஏழைகளிடம் பரிவு, தன் துறைசார்ந்த கலைஞர்களுக்கு உதவியவர். தன் சுயநலத்திற்காக அரசியலுக்கு வரும் ரஜினி முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டியவர். அரசியலுக்கு வந்தாலும் செல்லா காசுதான். மீடியாக்கள் தான் நடிகர் ரஜினியை தூக்கி பிடிக்கின்றன. நடிகர் ரஜினி ஆதரித்த கட்சிகள் மண்ணை கவ்விய தேர்தல்கள் தமிழ்நாட்டில் உண்டு.

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  கூவத்தூர் episode ம்போது தான் எனெக்கு இவரு யாருன்னே தெரியும்

Advertisement