Advertisement

தற்கொலைக்கு முயன்ற சிறுவன்: சடுதியில் காப்பாற்றிய நண்பன்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்ற 8 ம் வகுப்பு மாணவரை சக மாணவர் உடனே காப்பாற்றினார். மாணவரின் துணிச்சலை, மாவட்ட எஸ்.பி., மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பேரையூர் அருகேயுள்ள பகுதி கருங்குளம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தனது தந்தை உடல்நலக்குறைவால், உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த மாணவர் நேற்று(நவ.,11) பள்ளியில் உள்ள மரக்கிளையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை, அப்பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் கருங்குளத்தை சேர்ந்த அவரது நண்பரான வடிவேலன் என்ற மாணவர் பார்த்தார்.

உடனே, தற்கொலைக்கு முயன்ற மாணவரை தோளில் தூக்கியதுடன் கூச்சல் போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாணவனை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறித்த ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., வருண்குமார், வடிவேலனை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பொதுமக்களும் பாராட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

  • Charles - Burnaby,கனடா

    என்ன மனிதாபி மானம், சமயோஜிதம், துணிச்சல், இந்த வயதில். நாடே இவனை பாராட்ட வேண்டும். அவன் படிப்பு செலவை அரசாங்கம் ஏற்க வேண்டும். ஒரு உயிருக்கு விலை ஏது. பழனிச்சாமி ஒரு சிறுவனின் மரணத்திற்கு அரசாங்கத்தின் ரூபாய் 20 லட்சத்தை அவனின் பெற்றோர்களிடம் கொடுக்க வில்லையா ??

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    நண்பேன்டா

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    இந்த சமயோசிதம் பாராட்டுக்குரியது. வாழ்க

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    பாராட்டுக்கள்.

  • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

    This type of suicide attempts were unheard of in the past.

Advertisement