Advertisement

மஹா.,வில் ஜனாதிபதி ஆட்சி அமல்

மும்பை: மஹாராஷ்டிராவில் யாரும் ஆட்சி அமைக்க முன்வராத நிலையில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கவர்னர் கெடு




மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில், பா.ஜ., சிவசேனா இடயே இழுபறி ஏற்பட்டது. சிவசேனா நிபந்தனைகள் காரணமாக, ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. இதனையடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த பா.ஜ., தலைவர்கள் 'ஆட்சி அமைக்கும் திட்டம் எங்களிடம் இல்லை ' என தெரிவித்தனர். தொடர்ந்து சிவசேனாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். நேற்று(நவ.,11) மாலைக்குள் ஆதரவு கடிதம் கொடுக்கும்படி சிவசேனா தலைவர்களுக்கு கவர்னர் கெடு விதித்தார்.

அவகாசம் அளிக்க மறுப்பு




தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேறியது. மேலும், உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. தொடர்ந்து சிவசேனா கட்சியினர் , ஆட்சி அமைக்க கால அவகாசம் கோரினர். ஆனால், அதற்கு கவர்னர் மறுத்துவிட்டார். தொடர்ந்து தேசியவாத காங்கிரசுக்கும் ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால், அக்கட்சி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

பரிந்துரை




மஹாராஷ்டிராவில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததாலும், சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்தும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்: மஹாராஷ்டிராவில் சட்டப்படி ஆட்சி அமைக்க இயலாத சூழல் உருவானதாகவும், இதனால் அரசியல்சட்டப்பிரிவு 356வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.


ஒப்புதல்




இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். இதனையடுத்து, மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

வழக்கு



மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.சிவசேனா சார்பில், காங்., கட்சியின் கபில் சிபல் தாக்கல் செய்த மனுவில், பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் ஏதும் கவர்னர் வழங்கவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி தலைமை நீதிபதியை சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (120 + 80)

  • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

    காங்கிரசின் கூட்டோ அல்லது காங்கிரசின் ஆதரவாலோ ஆட்சி அமைத்த கட்சிகளின் அவல நிலை நாம் அறிந்ததே - தமிழகம், கர்நாடகா, இப்போது மகராஷ்டிரா. அழிவு என்று தெரிந்தும் சேரும் கட்சிகளுக்கு என்ன சொல்ல, பேராசை பெரு நஷ்டம்.

  • Mithun - Bengaluru,இந்தியா

    பால் தாக்ரேஜியின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாரான சிவசேனாவின் அரசியல் சரிவு தொடங்கிவிட்டது.

  • Rajas - chennai,இந்தியா

    ஒரு பத்திரிகையில் வந்தது. ஆட்சியே அமைக்க முடியாது என்று சொல்வதற்கும் ஆட்சி அமைப்பதற்கு நேரம் தேவை என்று சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா

  • J.Isaac - bangalore,இந்தியா

    மனிதனாக மனித தன்மைகளோடு வாழ வேண்டும். மதம் மனிதனை நல்வழிபடுத்துவதற்கே.

  • Unnai pol Oruvan - Bangalore,இந்தியா

    எதிர் குரூப் சட்டையில ஓட்டை விழுந்தது பத்தி பேசிட்டு இருக்கானுங்க...

    • Rajas - chennai,இந்தியா

      அந்த குரூப்புக்கு சட்டையில் ஓட்டை போட்டுவிட்டு மக்கள் இன்னொரு பராக்கிரம குரூப்புக்கு உடம்பிலே ஓட்டை போட்டு விட்டார்கள்.

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      இன்னொரு பரிதாப க்ரூப்புக்கு இது எதுக்கும் லாயக்கில்லைன்னு சொல்லி நாலாவது இடம் கொடுத்துட்டாங்க.

மஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் (80)

  • Ray - Chennai,இந்தியா

    சூடு கண்ட பூனை பட்டது போதும் என்று உஷாராகிவிட்டது

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    அப்படி நினைக்காதீங்க ....'உதவு'க்கு தன மகன் முதலமைச்சராகவேண்டும் என்பது தான் வெறி , குறி. ..அதை அடைவதற்கு எது வேண்டுமானாலும் செய்வார் கூட்டணி அரசு அமைந்தாலும் வெகு நாட்கள் பிழைக்காது....இது தெரிந்துதான் சோனியா ஆதரவு தர தயங்குகிறார்

  • ilitchavaya tamilan@naanum hinduthaan - erode,இந்தியா

    Enathu siriya arivukku ettiya oru arasiyal kannottam ithu.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    தேசியவாத காங்கிரசுக்கு பாஜக ஆதரவளிக்கவேண்டும் (சிவசேனை மற்றும் காங்கிரசை உள்ளே சேர்க்கக் கூடாது என்கிற நிபந்தனையுடன்) என்று பலர் எழுதியிருக்கிறீர்கள்... காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்... ரெண்டுக்கும் பேருதான் வேற.. மத்த படி அதே கொள்ளைத் திட்டம்.. சாரி ...... கொள்கைத் திட்டம் .......

  • Srivatsava -

    சிவ சேனா BJP யிலிருந்து விலகி காங்கிரஸிடம் உறவை நாடுகிறது. இது அவர்களின் உண்மை நிறத்தை மஹராஷ்டரியர்களுக்கு அப்பட்டமாக காட்டிவிட்டிருக்கும் என நம்புவோமாக.

    • Pannadai Pandian - wuxi

      One is a kattar Hindu party another is muslim, Christian vandheri party. How these go hand in hand ??? Sure this alliance will break or sivasena will lose people's mandate.

  • Uthiran - chennai,இந்தியா

    சிவசேனா மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள். சிவசேனாவை அரசியலில் செல்லாக்காசாக்க இதைவிட நல்லவழி கிடையாது.

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    இவனுங்க எப்பயுமே இப்பிடியே ரொம்ப கோசம் போட்டு நாசமா போறவனுங்க. இப்பிடியேதான், கர்நாடகாவில் கூவு கூவுன்னு கூவுனானுங்க. இப்போ, 29 ம் போச்சு. சொன்னா கேக்குற ரகம் இல்ல இவனுக.. என்ஜோய். நாங்க வைட்டிங். இப்போவும் சவால் இந்த மத சார்பற்ற கூட்டத்துக்கு.... இந்த கூட்டணி உங்களுக்கு தரப்போவது பெரிய இழப்பையே... ரொம்ப கோசம் வேண்டாம். பொறுமையாய் இருந்து நஷ்டத்தை அனுபவியுங்கள். மோடி மேல் உள்ள பயம் உங்களை எந்த கேவல நிலைக்கும் சம்மதிக்க வைத்துவிட்டது. புலி , சிங்கம் தின்னது போக மீதியை நரி, ஓநாய் ,.... விலங்குகள் உண்டு வாழ்வது இயற்கையே. உயிர் வாழுங்கள்.....மீண்டும் ஒரு தோல்வி நீங்கள் அடைய, நீங்கள் வாழ வேண்டும்.

  • sankar - Nellai,இந்தியா

    உத்தவ் பாவம் நேற்று ராஜா வேஷம் - இன்று சிப்பாயை விட மோசம்

    • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

      எங்கள் கட்சிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தால் மட்டுமே, சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு... சரத்பவார்..

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    இது அங்கே மட்டும் நடக்கும் அசிங்கமல்ல.... பாவம் மஹா மக்கள்.... மீண்டும் அவர்கள் மீது தேர்தல் திணிக்கப்பட்ட வாய்ப்புள்ளது....

  • ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    When congress had a power many times they used 356 and dissolve the government, now the new trend is support for while after that automatically dissolve the government however the conclusion is same.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    MLA -க்கள் ராஜினாமா எப்போது ?...

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    மக்கள் பிரநிதிகள் இல்லாமல் வாழுங்கள் போடவில்லையா? அரசு இயங்க வில்லையா? மக்கள் உயிர் வாழவில்லையா? அப்படி இருக்க இவர்கள் வாழ்வதற்கு ஒரு தேர்தல் , இதற்க்கு மக்கள் பலிகடா என்ற போக்கை மாற்றி மக்களுக்காக அரசியல் என்று மாறினால் மட்டுமே ஜனநாயகம் விளங்கும், வந்தே மாதரம்

  • Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா

    எப்பாடு பட்டாவது காவிகள் வருவதை தடுத்து நிறுத்துங்கள் ஏன் எனில் ஒரே ஒரு MLA வைத்து கொண்டு மணிப்போரில் ஆட்சி அமைத்த வாறு இனி காலத்திற்கும் இவர்களுக்கு பயம் வரணும் அப்போ தான் மிரட்டல் அரசியல் முடிவுக்கு வரும் என்னுடைய மஹாராஸ்தா நண்பர் அடுத்து காங்கிரஸ் கூப்பிடும்போது அவர்கள் ஆட்சி அமைக்க ஒத்துக்கொண்டு அதை சேனாவுக்கு கொடுக்க வாய்ப்பு உள்ளது கவர்னர் நேரம் கொடுக்காததால் இப்படி ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார்

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      திராவிட திருட்டு புத்தி...வெளிப்படுகிறது.

    • Rajan - Alloliya ,இந்தியா

      விடப்பா ஹிந்து பெயரில் ஒரு மூர்க்கன் ,மணிப்பூர் சொல்ல தெரியல ,மதராசல படிச்சிருப்பானோ ?

    • மும்பை நாநா - ,

      உனக்கு இங்கிலீஷ் படிக்க தெரியுமாPut under suspended animation.இது தான் ஆளுநரின் முடிவு.உன் மகாராஷ்டிரா நண்பரை 145 MLA கூட்டிக் கொண்டு ஆளுனரை பார்க்க சொல்.

  • மணி - புதுகை,இந்தியா

    தல தல நம்ம ஊர்ல வெற்றிடம் வந்துச்சு தல...

  • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

    அய்யர் வரும் வரை அமாவாசை காத்துக்கொண்டு இருக்க வேண்டுமாம் அதற்கு பேசாமல் சந்திரனை கொஞ்சம் மெதுவாக நகர சொல்லலாம்

  • மணி - புதுகை,இந்தியா

    வெற்றிடம் வெற்றிடம் உடனே கிளம்புங்கோ...

  • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

    மதவாதத்தை பேசுபவரும், அதை எதிர்ப்பவரும் இருக்கிற வரைதான் பாரதம் ஒற்றுமையோடு இருக்கும். எல்லோருமே மதவாதிகளாகவோ அல்லது எல்லோருமே எதிர்பாளர்களாகவோ மாறிவிட்டால் நிலைமை மிக சிக்கலாக மாறும்.

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      \\\\ எல்லோருமே எதிர்பாளர்களாகவோ //// (மதவாதிகள் இல்லாத நிலையில்) எல்லோரும் எதிர்ப்பாளர்களாக இருப்பது எப்படிச் சாத்தியம் அறிவாளி நண்பரே ?? அனைவரும் மத அரசியல் செய்கிறார்கள் என்று உண்மையை ஒப்புக்கொள்ள அடிமைப்புத்தி விரும்பவில்லை ...... அதுதானே காரணம் ??

    • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

      ஆழ்ந்து படியுங்கள் அப்போது தெரியும் அறிவாளி யார் என்று அடிமை யார் என்று.

  • vbs manian - hyderabad,இந்தியா

    சிவா சேனாவும் வாரிசு அரசியல் சகதியில் மாட்டி கொண்டு முழிக்கிறது

    • s.rajagopalan - chennai ,இந்தியா

      அது எப்போதுமே ஒரு குடும்ப கட்சிதானே ?

  • Suri - Chennai,இந்தியா

    வான்கடே ஸ்டேடியத்தை பதவி பிரமாணம் செய்ய புக் செய்தார்களே.. அதை கேன்சல் செய்துவிட்டார்களா பீ ஜெ பீ யினர்??? ஹி ஹி ஹி ஹி ......

    • sankar - Nellai,இந்தியா

      தம்பி சூரி அசிங்கப்பட்டு நிற்பது திரு உத்தவும் அவரது குமரனும் கட்சியும்

  • Suri - Chennai,இந்தியா

    ஆட்டுவிப்போர் ஆட்டிவிட்டால் ஆடாதோர் யாரோ???? இங்கு தமிழகத்தில் ஒரு கவர்னர் இருந்தார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது லீவு போடு விட்டு மும்பை சென்று அமர்ந்து கொண்டார். பின்னர் பின்புற கதவு.. முன்புற கதவு எல்லாவற்றயும் அடைத்துவிட்டு...பின்னர் உச்சநீதிமன்றத்தயும் ஊக்குவித்து தூங்கிக்கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு கூற வைத்து பின்னர்.. அந்த கவர்னருக்கு உடனடி உடல் நலம் தேறி வந்து வேண்டியவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது தான் பீ ஜெ பீ கவர்னர்கள் லட்சணம். அதுவும் கட்சி இரண்டாக உடைந்த பிறகு தரகு வேலை எல்லாம் பார்த்து இரு பிரிவினரையும் கைகுலுக்க வைத்து அவர்கள் இருவரின் கைகளையும் சேர்த்து பிடித்து வைத்து பார்த்த கவர்னரும் நாம் கண்டுள்ளோம். அந்த இடைப்பட்ட காலத்தில் மைனாரிடியாக அரசு இருந்த போது.. அதை கண்டுகொள்ளாமல் ஆட்சியை நீடிக்கவைத்த அரசியல் சட்ட விரோத கவர்னரையும் நாம் பார்த்தோம். எவ்வளவோ விதமான கவர்னர்களை பார்த்து விட்டோம்..இந்த விதமான கவர்னரை பார்க்கமாட்டோமா?

    • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      பாத்துக்கோ.. நீ எந்த பால் போட்டாலும் அது நோ பால்தாண்டியோய்....

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      ஏனில்லாமல். கான்க்ராஸ் ஆட்சியின்போது அதன் கைப்பாவை கவர்னர்கள் நடந்துகொண்டதை எழுத ஆரம்பித்தால் ஒரு நாள் போதாதே. ஆந்திராவில் ஆட்சியில் இருந்த முதல்வர் மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு சென்றபோது மத்திய சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில் அந்த மாநில கவர்னர் ஆட்சி கலைப்பு செய்து ஒரு டம்மியை முதல்வராக்க சிகிச்சை முடிந்து திரும்பி வந்த முதல்வர் ஆந்திர மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சிக்கு வந்து சர்வாதிகாரிக்கு சரியான அடி தந்ததும் அந்த எடுபிடி கவர்னரின் முகத்தில் கரிபூசியதும் நடந்தது. ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டதால் பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாம் அப்போதைய மத்திய அரசின் உத்தரவுக்கிணங்க பொம்மை கவர்னர்கள் மூலம் கலைக்கப்பட்டது. தெலுங்கானா தனிமாநில அந்தஸ்தை பெறும்போது அனைத்து உறுப்பினர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது என்று அறிக்கை வெளியிடப் பட்டது. தற்போதைய பிரதமர் குஜராத் முதல்வராக இருந்தபோது அம்மாநில கவர்னர் அவருக்கு குடுத்த குடைச்சல்களை நாடறியும். அரசுக்கு ஆதரவு வாபஸ் என்று எப்போதெல்லாம் கான்க்ராஸ் கட்சி நினைத்ததோ அப்போதெல்லாம் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்தது. அதற்காக அப்போதைய ஜனாதிபதிகள் கையெழுத்தும் அமோகமாக பெறப்பட்டது. இப்படி, போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக்கோ என்கிற அளவில் கவர்னர்களையும், ஜனாதிபதிகளையும் தன்னிஷ்டம் போல் ஆடவைத்து மகிழ்ந்து ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாகி வைத்திருந்த கான்க்ராஸ் கட்சிக்கு இணையேது. நாங்கள் பார்க்காத கவர்னர்களா, ஜனாதிபதிகளா இவர் புதிதாய் சொல்ல.

    • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

      ராம்லால் AP governer கூகுளில் தேடிபார்க்கவும், அப்போது புரியும் governer இந்திரா காலத்தில் எப்படி இருந்தார்கள்

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    மக்கள் யார் வர வேண்டும் என்று வாக்களித்தார்கள்..யார் வரக்கூடாது என்று வாக்களித்தார்கள்...ஆனால்...எல்லா கட்சிகளும் சேர்ந்து மக்களை மடையர்களாக ஆக்குவதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்...

  • பச்சையப்பன் -

    இந்த இந்திக்கார பீடாவாயன்கள் தெளிவாக அமுக்கி தொலைத்திருந்தால இத்தனை குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. இங்கு 2தொகுதிகளில் நோட்டால் அடிபட்ட பிண்டங்களைப் போல அங்கே 150 தொகுதிகளில் சோற்றால் அடித்த பிண்டங்கள் இருக்கிறார்கள். சிவசேனா சர்ட் போவார் காங் இணந்தால் சூப்பரான ஆட்சி தர முடியும். இதுவே பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு முன்னோடியாகும்.

    • Yaro Oruvan - DUBAI

      ஆத்தாடி.. அப்படியே அமெரிக்க ஆட்சி மாற்றத்திற்கும் முன்னோடியா இருக்கும்.. செய்ங்க..

    • s.rajagopalan - chennai

      உங்க 'சொக்க தங்கம் ' என்ன செஞ்சிக்கிட்டிருக்கு ?

  • narayanan iyer - chennai,இந்தியா

    சட்டசபையை கலைத்து ஆளுநர் ஆட்சியை ஒரு இரண்டு வருடம் செய்தபின் தேர்தல் நடத்தலாம் . ஆனால் மகாராஷ்டிரா இந்தியாவின் வணிகத்தின் முதலிடம் . ஆதலால் அரசுதான் முக்கியம். என்றாலும் இப்போதைய நிலையில் ஆளுநர் ஆட்சிதான் சிறந்தது .

  • மணி - புதுகை,இந்தியா

    தனது சொந்த இடத்திலேயே வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது, எங்கே சிவாஜிராவ் கெய்க்கவாட்?

    • Suri - Chennai,இந்தியா

      ஹா ஹா ஹா ஆஹா ...அப்படி கேளுங்க மணி

    • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

      அது அவருடைய சொந்த இடம் இல்லை, பிறந்த இடமும் இல்லை. அவர் யாராக இருந்தாலும் இங்கு அவரை தேர்ந்தெடுப்போம் போலி மதசார்பின்மை ஒழிக்கப்படவேண்டும்

    • மணி - புதுகை,இந்தியா

      தந்தையையும் தான் பிறந்த இனத்தயும் மாத்தி சொல்லுறது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?

    • ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா

      Mr.மணி - புதுகை,இந்தியா தந்தையையும் தான் பிறந்த இனத்தயும் மாத்தி சொல்லுறது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா?... என்று நீங்கள் கூறுவதையே தான் பல ஆண்டுகளாக இங்கு பலரிடமும் நான் கூறிவருகிறேன்.. ஆனாலும், அந்த அசிங்கம் பிடிச்சவனுக.. தன் தாய் - தந்தைக்கு சோறுபோடாமல் வீட்டை விட்டு துரத்திவிட்டு, ''எங்கள் தந்தை பெரியார் வாழ்க.. எங்கள் தந்தை பெரியார் வாழ்க '' என்று தங்களின் தந்தையையே மாற்றி... ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தங்களின் தந்தை என்று கூறி அசிங்கமாக கூவுகிறார்கள்.. இதெல்லாம் விட செத்துப்போன ஒரு மனிதரை.. வாழ்க வாழ்க என்றும் கூவுகிறார்கள், ''வாழ்க '' என்றால் என்ன அரத்தம் என்று கூடத்தெரியாத இந்த சிறந்த தமிழர்கள்.. இந்த தமிழனுக்கு தந்தை... ''தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூறிய.. தன்னை நான் கன்னடன் என்று கூறிக்கொண்ட ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.... அந்தோ பரிதாபம்.. இத்தனை பேருக்கும் ஒரே தந்தையா? .. ஆச்சரியமாக உள்ளதே..

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    இத்தாலிய பக்கவாதமும் பாராமதி கோணவாயும் சேந்தா நாடு தருசா ஆவாதுங்களா தெண்டகோன் சார்?

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    துரோகம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை அன்பரே. அவர்கள் முதலில் இருந்தே இந்த கருத்தை வலியுறுத்தி வந்துள்ளனர். அதே சமயம், மக்கள் பிஜேபி தலைமையைத் தான் நம்பியுள்ளனர். வாரிசுக்காக என்னவெல்லாம் நடக்கும் , எவ்வளவு தூரம் நாடு நஷ்டப்படவேண்டியுள்ளது என்பது மக்களுக்கான பாடம். நல்ல வேளை , இது நடந்தது பீடாபயனுங்க ஏரியா. அவனுங்க ஒடனே தவறில் இருந்து ஒடனே கத்துக்கிடுவானுங்க. நம்ம திருட்டு திராவிடல்சுக்கெல்லாம் இது போதாது. சிவகங்கை, சென்னை,கஸ்மீரை, டெல்லியை தொடர்ந்து வாரிசு வியாதி மும்பைக்கும் பரவிருக்கு. ஒரே நல்ல விஷயம்...விஷமுறிவு என்ற பெயரில் விஷத்தையே கொடுத்துள்ளார்கள் தாக்கரேக்கு. பாப்போம். மக்களுக்கு, முச்சந்தி..மூணு திசைக்கு இழுத்து , நடுவில் நிற்கபோகும் மக்கள், அடுத்த முறை , பிஜேபியை தனித்து தேர்ந்தெடுப்பார்கள். அங்க ஒன்னும் நம்ம திருட்டு த்ராவிடல்ஸ் இல்லையே மீண்டும் மீண்டும் மொக்கையாகி, எச்சி குடி, எச்சி சோறுக்கு ஒட்டு போட.. இதுவே நிஜம். பாப்போம்.

    • Madhumohan - chennai,இந்தியா

      ஒண்ணுத்துக்கும் உதவாத கமெண்ட்........

    • Robins - Chennai,இந்தியா

      பிஜேபி மட்டும் மற்ற கட்சிகளில் இருந்து எப்படி வேறு படுகிறது... எல்லா கட்சிகளையும் போலத்தான் ... ஊழல் ... பிரிவினை வாதம்.. அடாவடி அரசியல்... இதுல எவன் யோக்கியம் ...நடிப்பு வேற..

    • சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா

      ரொபின் உன் புத்தி போகாது. கூட்டு கொள்ளை காரர்கள், பெண்ணாடுபவர்கள் பிரார்தனைக்கு பதிலாக மோடியை திட்டவதையே பிரார்த்தனையாக செய்வதை கேட்டுக் கொண்டு இங்கே எதுவும் பேசவேண்டாம். ஊழல் ஊழல்னு உங்க ஊழலைத்தான் நீங்கள் கூறுகிறீர்கள். கோர்ட்டு வரை சென்று வந்தாயிர்ற்று. என்ன ஊழல் கண்டு பிடித்தீர்கள்? எதுவுமில்லை. உங்கள் திமுக, காங்கிரஸ் செய்யாத ஊழல் உலகத்தில் எவனும் செய்ய முடியாது.

    • elakkumanan - Naifaru,மாலத்தீவு

      உண்மைதான் அன்பரே. ஒண்ணுத்துக்கும் உதவாது. தீயமுக வுக்கு சம்பாரிக்க வழி இல்லாத எதுவுமே உதவாததுதான்.

    • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      ஆமாம்ப்பா மதுமோஹா.. இலக்குமணன் கமெண்ட் ஒண்ணுக்கும் உதவாது.. ஆனா ஒண்டோட கமெண்ட் இந்தியாவை வல்லரசா மாத்தீடும்.. பலே பலே

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      இலக்குமணனின் கருத்தைப் புரிந்து கொள்ளவே கொஞ்சம் அறிவு வேண்டும் ...... அதை மதுமோகன் வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறார் ?

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    கவர்னர் கூடுதல் அவகாசம் குடுப்பது அவரது நடு நிலை பாட்டை கடை பிடிப்பதாகவும், பிஜேபியின் பொறுமை மற்றும் முதிர்ச்சியையும் மக்களுக்கு அது எடுத்து உரைக்கும்.

    • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

      கவர்னர் நீங்கள் சொல்வது போல் செய்தால் நடு நிலை மீறியவர் ஆவார். அளவுக்கு மீறிய நடுநிலை தேவையில்லை

    • Suppan - Mumbai,இந்தியா

      பாஜகவுக்கும் ஒரு நாள்தான் அவகாசம் கிடைத்தது . சிவசேனாவுக்கும் அதே அவகாசம்தான் . கூடுதல் அவகாசம் கொடுத்தால் கட்சி மாறுதலுக்கு வழி திறக்கிறார் என்று கூவுவார்கள்.

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    பாஜ கூட்டத்தானுங்களத் தவுத்து வேற யாரும் ஆட்சியமைக்கக்கூடாதுங்கறதுல அந்தெ கவர்னரு கண்ணுங்கருத்துமா இருக்கார்

    • மும்பை நாநா - ,

      ஏன் ‌முடிவு வந்த நாளிலிருந்து ‌170 சட்ட சபை உறுப்பினர் எங்களிடம் உள்ளனர் என்று கூவி கிட்டு ‌தானே இருந்தாங்க. இப்போ எங்கே அவர்கள்

    • Suppan - Mumbai,இந்தியா

      சிவசேனா நிலவரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பாஜகவுக்கும் அரசு அமைக்க ஒரே நாள் அவகாசம்தான் கிடைத்தது. சிவசேனா ஒரே நாளில் இன்று வரை எதிரிக் கட்சிகளாயிருந்த காங்கிரசையும் தேசியவாத காங்கிரசையும் ஒரே நாளில் ஆதரவு கொடுக்குமாறு வற்புறுத்த முடியுமா? தங்களுக்கு எவ்வளவு ஆதாயம் கிட்டும் என்ன நஷ்டம் வரும் என்பதை நிச்சயம் செய்து கொண்டுதான் ஆதரவைப் பற்றி முடிவெடுப்பார்கள். பவார் முதிர்ந்த அரசியல்வாதி. அவருடைய வலையில் சிவசேனா விழுந்துவிட்டது. எதற்காக பாஜகவுடன் சண்டை போட்டார்களா அந்த முதல்வர் பதவி கிட்டாது. பவார் விடமாட்டார். அப்படியே அரசு அமைத்தாலும் அவர் கையில்தான் லகான் இருக்கும். "நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய்க் கயவனை வேண்டி …" கதைதான் . பெயரைக் கெடுத்துக் கொண்டதுதான் மிச்சம் . எங்கே அந்த சஞ்சய் ரவுத்? பிடி அவரை . தலைமையை தவறாக வழி நடத்தி நடுச் சந்தில் விட்டதற்கு. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாயிற்று கட்சியை விட்டு கழற்றி விடு ..

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      பாஜக "நாங்க இந்த விளையாட்டுக்கு வரல" -ன்னு ஏற்கனவே சொல்லியாச்சு ........... உனக்கு அம் னீசியா அல்லது அல் சைமர் முத்திப்போச்சு .....

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      // பாஜக "நாங்க இந்த விளையாட்டுக்கு வரல" -ன்னு ஏற்கனவே சொல்லியாச்சு // ஆனா, அதை சொல்றதுக்கு 15 நாள் எடுத்துக்கிட்டாங்க.

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    சிவ சேனாவிற்கு அந்திம காலம் வந்து விட்டது

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    மதவாதமும் மதவாதமும் ஒன்னு சேர்றதுதான் ஒத்துவரும், நாடு தருசா போவரது நிச்சியம். Congress and NCP should watch the tamasha from a distance

    • sankar - Nellai,இந்தியா

      விவரம் புரியாமல் நடிக்கிறீரா அல்லது கோமாவில் இருக்கிறீரா மிஸ்டர்

    • மும்பை நாநா - ,

      ரொம்ப தாண்டாத யாரு‌ மதவாதக்கட்சி என்று மராட்டியருக்கு தெரியும்

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      மதசார்பின்மை என்று சொல்லி ஹிந்துக்களை மட்டமாக நடத்தும் அந்த இரண்டு கான்க்ராஸ் கட்சிகள் தான் இவருக்கு படியளக்கும் கட்சிகளாம்.

    • Rajan - Alloliya ,இந்தியா

      இவன் நேத்து ஒன்னு சொன்னான்

    • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

      They have been watching from distance for a long time, and they will continue to do so for ever. Dont worry.

    • Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா

      மதவாதி என்று மார்தட்டிக் கொள்ளும் சோவ்கிதர் இங்கே......

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      ஆம். நான் மதவாதி தான். அப்படி சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமைதான். நானொரு ஹிந்து தான். 100 % ஆஸ்திகன். ஹிந்து மதம் மிகவும் உயர்வான மதம் என்று நினைப்பவன். RSS பேரியக்கத்தில் இருந்தவன். அதன் விசுவாசி. பாரதம் ஹிந்துக்களுக்கே சொந்தம் என்று குரல் கொடுப்பவன். அப்படி சொல்வதில் எனக்கு எந்த ஒரு அசிங்கமும் கிடையாது மாறாக பெருமையே. சுடலை, சைக்கோ, குருமா, சைமன், மமதை, உண்டிக்குலுக்கிகள், மணிமேகலை, பப்பு போல் சிறுபான்மை என்று சொல்லி பெரும்பான்மையினர் தலையில் மிளகாய் அரைப்பது எனக்கு அறவே பிடிக்காது. உங்களை போல் வெளிநாட்டு பிறவிகளுக்கு வக்காலத்து வாங்கி விளக்கு பிடிப்பவன் அல்ல. உள்ளே ஒன்று இருக்க புறமொன்று பேசும், அப்படி நடக்கும் மலிவான தமிழகத்து தீயமுகவையும் இன்னபிற திராவிஷ காட்சிகளையும் அடியோடு வெறுப்பவன். போதுமா இன்னமும் சொல்லவா.

  • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

    Politics is a daily market in Maharashtra. The cost of power is based on the demand. MLAs are now costly commodity. If the governor rule is imposed in that state, the cost of MLAs will become almost zero. No MLA is a saint, they have to earn in multiples for the amount spent by them in the election. Now they will try to keep the assembly going, but the leaders are bargaining for their future. Bada NETAS are suppressing chota NETAS. If suppose governor rule is imposed in the state, the ultimate anger goes against Thackeray family. The Thackeray family especially his son political career will be in doom in future elections. Nobody will believe Thackeray family.

    • Suri - Chennai,இந்தியா

      Neither Congress nor NCP will allow that to happen. The situation you enlisted possibly could be the target of BJP but again.. now is the time.. BJP 's every plan will collapse since this kind of numerical arrangement will never happen again in that assembly. For me it appears like the ning of the downfall of Modi-Amit strategies. If they fail in an important State like Maharashtra.. and the rest will learn from this incident , the going is going to be very tough for BJP where their whipping up of religious sentiments strategy or playing out nationalist card is not going to yield any result. BJP is not in power in any of three big economic power wielding states ( Punjab, Tamilnadu & Maharashtra). They can only toy around with BIMARU states Party with beemaaru ( decease in hindi) can only win states with poor economic and religious track record

  • Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ

    தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க மேதகு கவர்னர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். எனவே திரு.சரத் பவார் முதன் மந்திரியாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமையில், பாஜக வின் முதுகில் குத்திய சிவசேனை கட்சிக்கு ஒருபாடம் அல்லது படிப்பினையாக பாஜக கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து தார்மீக ஆதரவை அளிக்கலாம். அப்போது ஒரேயொரு கண்டிஷனை போடலாம். எந்த காரணம் கொண்டும் சிவசேனை கட்சியை அரசில் சேர்க்கக்கூடாது என்று. ஏனென்றால் கடந்த 2014 தேர்தலில் பாஜக 122 தொகுதியில் வென்றபோது தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்தது. பின்பு சிவசேனை பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது. இவ்வாறு செய்தால் சிவசேனை கட்சியின் சாயம் வெளுத்துவிடும். செய்வாரா திரு அமித் ஷா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

    • pannadai pandian - ,

      Giving support to sharad pawar is same as giving power to dawood ibrahim. once sharad pawar becomes CM, dawood gang will freely roam maharastra.

    • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

      பாஜக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம், காங்கிரஸ் மற்றும் சேனாவை அமைச்சரவையில் சேர்க்க கூடாது என்கிற கண்டிஷனுடன்

  • NALAM VIRUMBI - Madurai,இந்தியா

    Even if Shiv sena forms Govt, it won't last long. This greedy Uddhav is digging pit for the party. Voters will teach him lesson in the next election. Marathi people are patriotic. It's going to happen definitely.

  • Senthil kumar - coimbatore,இந்தியா

    எதாவுது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு பரபரப்பாகி, கடந்த நிகழ்வுகளை மக்களின் நினைவுகளிலிருந்து நீக்கும் யுக்தியை அரசியல்வாதிகள் பெற்றுள்ளனர்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    காங்கிரஸ்க்கு பூனைமேல் (?) மதில் நிலைமை .சிவசேனாவை ஆதரித்தால் இஸ்லாமிய வாக்குவங்கி பறிபோகும் .சிவசேனாவை ஆதரிக்க மறுத்தால் கையிலிருக்கும் காங் எம் எல் ஏக்கள் கட்சியை உடைத்து அணி தாவும் வாய்ப்புண்டு .(வென்றபிறகு ஒரு பைசாகூடசம்பாதிக்காமல் மறுதேர்தல் எனவந்தால் பணத்துக்கு எங்கே போவது?) வாக்குவங்கியா எம் எல் ஏக்களா? வழக்கம் போல் பப்பு தப்பிவிட்டார். சொக்கத்தங்கம்தான் முழிக்கிறார்

    • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

      அன்னை சோனியா எந்த முடிவெடுத்தாலும் சரிதான்.

    • elakkumanan - Naifaru,மாலத்தீவு

      பாவம்பா, இன்னும் கொஞ்சம் நாளைக்கு இருந்துட்டு, போகட்டும் . ஏன் இப்பிடி அவசரப்படுறீக.?

  • Sathya Dhara - chennai,இந்தியா

    இந்த உத்தவ் தாக்ரே ஒரு துரோகி.....தேச துரோகி.....நட்பு துரோகி.... ஹிந்து துரோகி. கட்டுமர புத்தி முற்றிலும் ஆட்கொண்டு விட்டது. இவரது தந்தை உத்தமன். அவரது ஆவி இவரை மன்னிக்காது. ஹிந்துக்கள் இவரது யோக்கியதை என்ன என்பதை புரிந்து கொண்டு விட்டனர். இதுவும் நல்லது தான். அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வி மக்களால் நிராகரிக்கப்படுவார். சிவசேனாவின் தொண்டர்கள், தலைவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும். இந்த துரோகியை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும்.

    • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

      எப்டீ..., Madras சுல ஒக்காந்துண்டு அவாள அப்புறப்படுத்தப்போறியா

    • டுமீலன் - ,

      தாண்டவகோண், நீர் கூட , மெட்ராஸ் ல ஒக்காந்து அயோத்யில மசூதி கட்ட கர்த்துபோட்டவன் தானே?!!!

    • s.rajagopalan - chennai ,இந்தியா

      விடுங்க ... தாவி , தாவி தத்தி தத்தி தாண்டவமாடும் இவர் ...ஒரு பச்சையப்பன்....ஒரு ராஜவேலு ....இவிங்கதான் கங்கிராசுக்கு தாளம் போட்டுக்கிட்டிருங்கங்க ......வயிற்றெரிச்சலை கொட்டிக்கிறாங்க ...பாவம்..விடுங்க ....

Advertisement