Advertisement

காலால் எடுத்த செல்பி: நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை,சந்தித்த கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், காலால் செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மாற்றுத்திறனாளியை பாராட்டி வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்தவர் பிரணவ், மாற்றுத்திறனாளி. இவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. கால்களை கைகளை போல் பயன்படுத்தி வந்தார். லோக்சபா தேர்தலில் கூட மின்னணு ஓட்டு இயந்திரத்தில் கால்களை பயன்படுத்தி ஓட்டு போட்டார்.
இந்நிலையில், கேரள மாநில நிவாரணத்திற்கு நிதி அளிக்க பிரணவ், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது, பிரணவ் கால்களை, தன்னுடைய கைகளால் பிடித்து முதல்வர் விஜயன் வரவேற்றார். நிவாரண நிதி அளித்த பின்னர், முதல்வருடன், பிரணவ் கால்கள் மூலம் மொபைலை பிடித்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் வெளியாக, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

  • S.BASKARAN - BANGALORE,இந்தியா

    கேரளா முதல்வருக்கு மிகவும் பாராட்டுக்கள்.சூப்பர்,சூப்பர்.

  • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

    Hats off to you, CM Sir ‼️‼️‼️ Royal, and a humble, salute to you 🖖🖖🖖

  • balaji - chennai,இந்தியா

    பினராயி விஜயன் ஒரு சிறந்த மக்கள் நலம் விரும்பும் முதல் அமைச்சர்

  • Believe in one and only God - chennai,இந்தியா

    Kerala CM is great.

  • J.Jinnah - Dubai / Thinaikulam,ஐக்கிய அரபு நாடுகள்

    காலால் எடுத்த செல்பி: நெட்டிசன்கள் நெகிழ்ச்சி/ இதை மோடி செய்து இருத்தால் உங்கள் தலைப்பு எப்படி இருந்திருக்கும்

    • Pannadai Pandian - wuxi,சீனா

      ..why do you expect modi to do this act ?

Advertisement