Advertisement

டிச.,27, 28ல் உள்ளாட்சி தேர்தல்?

சென்னை: தமிழகத்தில் டிச., 27 மற்றும் 28 ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அதிமுகவும், திமுகவும், கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், டிச., 27 மற்றும் 28 ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், அரையாண்டு தேர்வை முன்னரே முடிக்கும்படி, பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    தயவுசெய்து உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள் .. தெருவிளக்கு ஒன்றும் எரிவதில்லை, குடிதண்ணீர் ஒழுங்காக வருவதில்லை ... ரோடுபூராவும் குண்டும் குழியுமாக உள்ளது .. யாரிடத்தில் முறையிடுவது என்று தெரியவில்லை .. தேர்தல் வந்தாலாவது இதெல்லாம் கொஞ்சம் சரியாகும் ...

Advertisement