Advertisement

பூஜை செய்வதில் ஏற்பட்ட தகராறு: கோவில் சுவாமி சிலைகள் உடைப்பு

Share
சேந்தமங்கலம்: கோவிலில் பூஜை செய்வதில் ஏற்பட்ட தகராறில், பூசாரி வீடுகள் மற்றும் ஒட்டடி பெரியசாமி கோவில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் முத்துகாப்பட்டி அருகே, கொல்லிமலை அடிவாரத்தில், ஒட்டடி பெரியசாமி கோவில் உள்ளது. புதுக்கோம்பையை சேர்ந்த ரகு, 21, அண்ணாதுரை, 35, பூசாரிகளாக உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன், முகமூடி அணிந்த வந்த இருவர், ரகு, அண்ணாதுரை வீட்டில் ஜன்னல், கதவுகளை உடைத்து விட்டு, தப்பிச் சென்றனர். சேந்தமங்கலம் போலீசார் விசாரித்தனர். அதையடுத்து, பெரியசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு, கருப்பணார், முனியப்பன் சுவாமி சிலைகள், குதிரை வாகனம் உடைக்கப்பட்டிருந்தன. விசாரணையில், கொல்லிமலை வாழவந்திநாடு ஊர்ப்புற காலனியைச் சேர்ந்த ஒருவர், கோவிலில் பூஜை செய்ய உரிமை கோரியுள்ளார். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து, ரகு, அண்ணாதுரையிடமும், அவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார் என, கூறப்படுகிறது. அதனால், பூசாரிகளை பழிவாங்கும் நோக்கில், அவர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement