Advertisement

புறவழிச்சாலை வடிகாலில் விழுந்த மாடு மீட்பு

Share
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலை, தட்டான்குட்டை பிரிவு எதிரில் உள்ள வடிகாலில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், பசுமாடு ஒன்று, இரவு நேரத்தில் நிலை தடுமாறி வடிகால் பள்ளத்தில் விழுந்தது. அக்கம் பக்கத்தினர் பசுவை மீட்க முயற்சித்தனர். குமாரபாளையம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி பசுவை மீட்டனர். விசாரணையில், கத்தேரி பிரிவு அருகே, விஜய நகர் காலனியை சேர்ந்த தம்பிராஜ், 55, என்பவரது பசு என தெரிந்தது. பசுவை உரியவரிடம் ஒப்படைத்தனர். புறவழிச்சாலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். ஒரு சிலர், மரத்தில் கயிற்றால் கட்டிவிட்டு பல மணி நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்கின்றனர். இது போல் கயிற்றால் கட்டப்படும் கால்நடைகள் சர்வீஸ் சாலை, புறவழிச்சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கு சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் செல்ல தடையாக இருப்பதுடன், பல கால்நடைகள் வேகமாக செல்லும் வாகனங்களில் அடிபடுவதுடன், இறக்கவும் செய்கின்றன. புறவழிச்சாலைகளில் கால்நடைகளை மேய்க்க அனுமதி தராமல் இருப்பதுடன், அவ்வாறு மேய்ப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement