Advertisement

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு

ப.வேலூர்: பரமத்தி அடுத்த, ஓவியம்பாளையம் வேலாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல், 60; விவசாயி. இவர், நேற்று காலை, 11:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள, 120 அடி ஆழமுள்ள விவசாயக்கிணற்றில் தண்ணீர் உள்ளதா என, அங்கிருந்த குழாயை பிடித்தபடி எட்டிப் பார்த்துள்ளார். நிலை தடுமாறி தண்ணீர் இரைக்கும் குழாயை பிடித்தபடி கிணற்றில் விழுந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக சத்தம் போட்டு உயிருக்கு போராடியுள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் பரமத்தி போலீசார் மற்றும் பகுதியினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் வடிவேலை பத்திரமாக மீட்டனர். அவரது இடது கை உடைந்தும், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement