Advertisement

இளைஞர்களை மீட்ட ராணுவத்தினர் ; " ஆபரேஷன் மா "- வெற்றி

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 60 இளைஞர்களை பேசியே திருத்தி கொண்டு வருவதில் இந்திய ராணுவத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.


ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாத அமைப்புகள் கால் ஊன்ற கடும் முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாக பாக்., பயங்கரவாதிகள் காஷ்மீரை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர். மேலும் இது போன்ற இளைஞர்களுக்கு பண உதவியும் வழங்கி வந்தனர். இதனால் உள்ளூரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை காஷ்மீர் இளைஞர்கள் எதிரியாகவே பாவிக்கும் நிலை மாறியது.


எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு, பயங்கரவாதிகள் சுட்டு கொல்வது என ராணுவத்தினர் வெற்றி பெற்றாலும் , உள்ளூர் இளைஞர்களை சரி செய்வதற்காக ராணுவத்தினர் " ஆபரேஷன் மா "- என்ற திட்டத்தை துவக்கினர். 15 வீரர்கள் கொண்ட இந்த குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் தலைமை கமாண்டராக நியமிக்கப்பட்டார்.


இந்த குழுவினர் உளவுதுறையினர் மூலம் பயங்கரவாத தொடர்புடையவர்களை அழைத்து அன்பாக பேசி அவர்களை திருத்துவதே இவர்களின் முக்கிய பணி. முதலில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் தாய்களிடம் பேசுவது, இவர்கள் மூலம் இந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவது என துவங்கி, பல முறைகளில் மனம் மாற்றப்படுவர்.


இந்த முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைத்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: இது வரை 60 பேர் மனம் திருந்தியுள்ளனர். அவர்களுக்கான மன நல ஆலோசனைகள் வழங்குவது, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பது முக்கிய பணியாகும். இன்னும் 20 பேர் வரை திருத்தும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளை முதலில் செய்யவேண்டியது இவர்களை திருத்துவது அல்லவே அல்ல. அவர்களை என்கவுன்ட்டர் தான் செய்ய வேண்டும், இவர்கள் திருந்தினாலும் மறுபடியும் கொஞ்சம் இடம் கிடைத்தால் அவர்கள் அவர்கள் வழியிலே சென்று விடுவார்கள். இரண்டாவது இவர்களை இப்படி செய்ய தஹாண்டும் தலைவர்களை ஏஜெண்டுகளை வெறும் என்கவுன்ட்டர் மன்னிப்பு கூடாது. அந்த மனிதர்களின் ஜனத்தொகை குறைய குறைய எல்லோரும் திருந்தி சாதாரண வழியில் பயணிப்பார்கள் இது உறுதி.

 • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா

  மத வெறி பிடித்தவர்கள் ஒருவிதத்தில் குடிகாரர்கள், போதை அடிமைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதாவது சைக்கோ போன்ற பரிதாபத்துக்குரியவர்கள்தான், ஆனால் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் விட மிகவும் அபாயகரமானவர்கள் இவர்களே ,எனவே நல்ல மனநல காப்பகத்தில் வைத்து அன்பு நேசம் மனிதாபிமானம் போன்றவற்றை புரியவைக்க வேண்டும்,.

 • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,இந்தியா

  மதம் மதம்னு வெறிபிடித்து திரியுபவர்களை எப்படி சார் மாற்றுவது அதா 3 வயசிலிருந்தே மண்டையில் விஷத்தை ஏற்றிவிடுகிறார்களே

 • sathyam - Delhi,இந்தியா

  இங்கே தாய் என்ன எவன் சொன்னாலும் திருந்தாத சுடலைகளும், குருமாவும்,சீமானும், டானியல் காந்திகளும், ஓசி சோறு சூரமணிகளும் உண்டு. இவங்களுக்கு ஒரே பாடம் கும்பி பாகம் .

 • வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா

  தெண்டம் ஒங்க கையில சிக்கினா புழிஞ்சிருவீங்க போலயே. அவனே பாவம் கோமாளி வேலை பண்ணி ..

Advertisement