Advertisement

இன்றும், நாளையும் மழை:சென்னைக்கு இல்லை

சென்னை: தமிழகம், புதுச்சேரியில், 12 மாவட்டங்களில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு பருவ மழை, தமிழகத்தில், அக்., 16ல் துவங்கி, 25 வரை பெய்தது. பின், அரபிக்கடலில் உருவான, 'கியார்' புயல், அதையடுத்து உருவான, 'மஹா' புயல் போன்றவற்றால், தமிழகம், புதுச்சேரியில் இருந்து மழை விலகியது. இதையடுத்து, வங்கக் கடலில் உருவான, 'புல்புல்' புயலால், மீண்டும், தமிழகத்தில் வறட்சி நிலை ஏற்பட்டது. இந்நிலையில், புல் புல் புயல் வலுவிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்தது. தற்போது, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், வறண்ட வானிலை நிலவுகிறது. நேற்று மாலை முதல், கேரளாவில் மழை தீவிரமாகி உள்ளது.
அடுத்து, படிப்படியாக வானிலை மாறி, தமிழகம், புதுச்சேரிக்கு தீவிர மழை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும், தமிழகத்தில் வெப்ப சலன மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் , சிவகங்கை, துாத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யலாம் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக, நேற்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், 6 செ.மீ., மழை பெய்துஉள்ளது. ராசிபுரம், 5; வால்பாறை, 3; செங்கம், மேட்டூர், ஆத்துார், கயத்தார், 2; திருத்துறைப்பூண்டி, வேலுார் - திருப்பத்துார், திருக்கோவிலுார், ராயக்கோட்டை, அஞ்சட்டி, பொள்ளாச்சி, பரங்கிப்பேட்டை, குன்னுார், 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement