Advertisement

மணல் கடத்தியவர் கைது

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதி வழியாக வந்த டிராக்டரை மறித்து ஆவணங்களை சரிபார்த்தபோது சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டி.ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த டிரைவர் நாகராஜ் என்பவரை கைது செய்தனர்.--------

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement