Advertisement

வருவாய்த்துறை அலுவலர்கள் கொட்டும் மழையில் உண்ணாவிரதம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து கொட்டும் மழையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். கலெக்டர் வீரராகவ ராவ் சமரசம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.


மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மரியாதை குறைவாக நடத்துவதாக வருவாய்த்துறை அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அவரை மாற்றக்கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களிடம் கலெக்டர் வீரராகவராவ் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் கைவிடப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement