Advertisement

தேசிய எறிபந்து: 28 பேர் தேர்வு

சென்னை : தேசிய சீனியர் எறிபந்து போட்டியில், தமிழக அணியில் பங்கேற்க, 28 வீரர் -- வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய எறிபந்து கூட்டமைப்பின் சார்பில், தேசிய அளவிலான சீனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி, மேற்கு வங்க மாநிலத்தில், டிச., 28ம் தேதி துவங்குகிறது.இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோர் பங்கேற்க உள்ளனர். இதில், தமிழக அணி சார்பில் பங்கேற்கும், வீரர் -- வீராங்கனையருக்கான தேர்வு போட்டி, தமிழ்நாடு எறிபந்து சங்கம் சார்பில், சோழிங்கநல்லுார், சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது.இந்த போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட, வீரர் -- வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.இதில், தமிழகம் சார்பில் பங்கேற்க, 14 வீரர்கள், 14 வீராங்கனையர் என, 28 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டோருக்கு, நாளை முதல் பயிற்சி துவங்குகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement