Advertisement

மாவட்ட ஸ்குவாஷ் 10 பள்ளிகள் பங்கேற்பு

சென்னை : சென்னையில் நாளை நடக்கும், வருவாய் மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் போட்டியில், 10 பள்ளிகள் பங்கேற்கின்றன.

சென்னை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி, பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் நடந்து வருகின்றன. இதில், பள்ளிகளுக்கு இடையிலான, 'ஸ்குவாஷ்' போட்டி, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், நாளை காலை நடக்கிறது. இந்த போட்டியில், இருபாலர் பிரிவிலும், 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றன.இதைத் தொடர்ந்து, 15ம் தேதி, கீழ்ப்பாக்கம், சீதா கிங்ஸ்டன் ஹவுஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவியருக்கான சிலம்ப போட்டி யும், 16ம் தேதி, அதே பள்ளியில், மாணவர்களுக்கான போட்டியும் நடக்கிறது.இதில், வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement