Advertisement

மாற்றுத்திறனாளிகள் கலெக்டருக்கு கோரிக்கை

சென்னை : வீடு, வேலைவாய்ப்பு வேண்டி, 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று, கலெக்டருக்கு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

சென்னை கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரம் திங்கட் கிழமை, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் சீதாலட்சுமி தலைமையில், குறைதீர் கூட்டம் நடந்தது.இதில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பேச இயலாத மற்றும் காது கேளாத, 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து, கலெக்டருக்கு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.அந்த மனுக்களில், ''எங்களுக்கு எந்த இடத்திலும் வேலை கிடைப்பதில்லை. இதனால், நாங்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கிறோம். ''வேலைவாய்ப்பு அமைத்து தர வேண்டும். அதேபோல், குடிசைமாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்க வேண்டும்,'' என, கோரிக்கை மனுவில் கூறியிருந்தனர்.இதைபோல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 179 மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாசில்தார்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement