Advertisement

மாவட்டங்களில் ஸ்ட்ராங் ரூம் ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு

திருப்பூர்:ஓட்டுப்பதிவு மெஷின்களைப் பாதுகாப்புடன் பராமரிக்க, தமிழகத்தில் உள்ள, 30 மாவட்டங்களில், 120.87 கோடி ரூபாய் மதிப்பில், 'ஸ்ட்ராங் ரூம்'கள் அமைக்கப்படுகின்றன.மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின்கள் மற்றும் 'விவி பேட்' கருவிகளை பாதுகாக்கும் வகையில், மாவட்டம்தோறும், 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்க, தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மதுரை, சென்னை நீங்கலாக, தமிழகத்தில், 30 மாவட்டங்களில், 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்கப்படுகிறது. இதன்மூலம், மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின்கள் மற்றும் 'விவி பேட்' கருவிகளை, ஒரே இடத்தில், பாதுகாக்கவும், பராமரிக்கவும் வசதியாக இருக்கும்.முப்பது மாவட்டங்களிலும், இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் வடிவமைத்துள்ளபடி, தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன், அலுவலகம், கூட்ட அரங்கு, 'ஸ்ட்ராங் ரூம்'களுடன் கட்டடம் கட்டப்படும்.மாவட்டத்தில் உள்ள, சட்டசபை தொகுதி எண்ணிக்கைக்கு ஏற்ப, 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்கப்படுகிறது. அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 7.50 கோடி ரூபாய், குறைந்தபட்சமாக, கரூரில் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டடம் அமைய உள்ளது.மொத்தம், 30 கட்டடங்கள் அமைக்க, 120 கோடியே, 87 லட்சத்து, 4 ஆயிரத்து 200 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பரில் பணிகள் துவங்கும்; 2020 அக்டோபருக்குள் கட்டடங்கள் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement