Advertisement

தேசிய டிஜிட்டல் சுகாதார செயல்திட்டம் வெளியீடு

திருப்பூர்:அனைவருக்கும், தரமான மருத்துவ சேவை கிடைப்பதை நோக்கமாக கொண்டு, தேசிய டிஜிட்டல் சுகாதார செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், தேசிய சுகாதாரக்கொள்கை, கடந்த 2017ல் வெளியிடப்பட்டது. இதை மையமாகக் கொண்டு, நாட்டின், அனைத்து குடிமகன்களுக்கும் உரிய தரத்துடனும், மலிவான கட்டணத்திலும், எளிதாகவும் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில், தேசிய டிஜிட்டல் சுகாதாரச் செயல்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.முன்னதாக, வரைவு செயல்திட்டம், கடந்த ஜூன் 15ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுமக்கள் உட்பட அனைத்து துறையினரின் ஆலோசனைகளைக் கேட்டபிறகு, செயல் திட்டம் வெளியாகியிருக்கிறது.''ஏற்கனவே, 50 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், தேசிய சுகாதாரக் காப்பீடு திட்டம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், செயல்பட்டு வருகிறது. இத்தொழில்நுட்பத்தைப் பரவலாக்குவதன் மூலம், மருத்துவ சேவைகளை மேலும், திறம்பட வழங்க முடியும். ஓருங்கிணைந்த சேவை மூலம், அனைத்து குடிமகன்களின் உடல்நலன் அறிக்கைகளை எளிதாகப் பெற முடிவதோடு, வசதியாகப் பாதுகாக்கவும் முடியும். மேலும், தனியுரிமையையும் காக்க முடியும்'' என்கின்றனர், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், குடிமகன்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பு, தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் குறைப்பு, நோய்த்தடுப்பு, ஊட்டச்சத்து உள்ளிட்ட லட்சியங்களை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 'பெரிதாகச் சிந்தி; சிறிதாகத் துவக்கு; இலக்கை வேகமாக்கு' என்ற முழக்கத்துடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement