Advertisement

மாணவர் அடையாள எண் யு.ஜி.சி., புதிய உத்தரவு

Share
திருப்பூர்:''தேசிய கல்விசார் வைப்பகம், மாணவர்களுக்கான அடையாள எண்ணை உருவாக்கும் வகையில், டிச., 31க்குள் கல்வி நிறுவனங்கள், புள்ளிவிவரங்களை வழங்க வேண்டும்'' என்று யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.பல்கலை, கல்லூரிகள் உட்பட கல்வி நிலையங்கள்வழங்கும் பட்டம், டிப்ளமோ, மார்க் ஷீட் உட்பட, மாணவர்களின் சான்றிதழ்களை தொகுத்து, டிஜிட்டல்வடிவில் பாதுகாப்பதற்கு, என்.ஏ.டி., எனப்படும், தேசிய கல்விசார் வைப்பகம் உருவாக்கப்பட்டது. இது, 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைகள், பள்ளி வாரியங்கள் என, நாடு முழுவதும், ஆயிரத்து 106 கல்விநிலையங்கள், என்.ஏ.டி.,யுடன், சேவை ஒப்பந்தம் செய்துள்ளன. இவை, தங்கள் புள்ளிவிவரங்களை என்.ஏ.டி.,யில் பதிவு செய்து விட்டன. என்.ஏ.டி., திட்டத்தைச் செயல்படுத்த, அங்கீகார அமைப்பாக, பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) செயல்பட்டு வருகிறது.''என்.ஏ.டி., திட்டத்தை அமலாக்குவதற்கென்று, அந்தந்தக் கல்வி நிலையங்கள், தனி செல் மற்றும் அதிகாரியை நியமிக்க வேண்டும். மாணவர்கள், என்.ஏ.டி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மாணவர்கள், இதன் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.சேர்க்கை மற்றும் தேர்வு விண்ணப்பங்களில், என்.ஏ.டி., அடையாள எண்கட்டாயமாகிறது. இதற்காக, மாணவர்களின் இ மெயில் முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவை அனுப்பப்பட வேண்டும். இது கிடைக்கப்பெற்றவுடன் மாணவர்களுக்கானபிரத்யேக அடையாள எண், தானியங்கு முறையில், உருவாக்கப்பட்டு விடும். அனைத்து கல்வி நிலையங்களும், வரும், டிச., 31ம் தேதிக்குள், தங்கள் புள்ளிவிவரங்களை வழங்க வேண்டும்' என்று, யு.ஜி.சி.,உத்தரவிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement